வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நாளை (20 ம் தேதி) தலைநகர் புதுடில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 11 மாநில விவசாயிகள் பங்குபெறும் கிசான் மகா பஞ்சாயத்து பேரணி நடைபெற உள்ளது.

latest tamil news

இது குறித்து ஐக்கிய சிசான் மோர்ச்சா மத்திய ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த ஆஷிஷ் மிட்டல் என்பர் கூறுகையில் உலக வர்த்தக அமைப்பின் கட்டளைகளின் கீழ், பயிர்களின் விவரக்குறிப்பு, உணவு பதப்படுத்துதல், சேமிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு அதிகரிக்கின்றன .

கார்ப்பரேட் மற்றும் வெளிநாட்டு கழுகுகளிடம் இருந்து இந்திய விவசாயத்தைப் பாதுகாக்கவும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும், இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திசையில் விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்தவும் தேவை அதிகரித்து வருகிறது.

latest tamil news

பிரதமர் அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாயிகளின் கோரிக்கையான எம்.எஸ்.பி கோரிக்கையை வெளிப்படையாக எதிர்க்கும் 26 உறுப்பினர்களை கொண்ட குழுவை அரசு அமைத்தது. இதனை எதிர்க்கும் வகையில் நாளை (20ம்தேதி) டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 11 மாநிலங்களை சேர்ந்த அகில இந்திய கிசான் மஸ்தூர் சபா உறுப்பினர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Judi Bola Parlay