திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அம்மனி அம்மன் கோபுரம் எதிரே அம்மனி அம்மன் மடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் இன்று காலை காவல்துறையினர், வருவாய்த் துறையினர், கோவில் ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் முன்னிலையில் 23 ஆயிரத்து 800 சதுர அடி நிலப்பரப்பு ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து மீட்கப்பட்டது.

மேலும் அம்மனி அம்மன் கோபுரம் எதிரே சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்புமிக்க அம்மனி அம்மன் மடம் இருந்து வந்தது. இந்த மடத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்கி உணவு உட்கொண்டு நீராடி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செய்து வந்தனர்.

குறிப்பாக நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றி அம்மனி அம்மன் மடத்தை சுற்றி வேலை அமைத்து பாதுகாக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தற்போது கோவில் நிர்வாகத்தால் 400 ஆண்டு பழமை வாய்ந்த அம்மனி அம்மன் மடம் இடிக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அம்மனி அம்மன் மடத்தை இடிக்க உத்தரவு பிறப்பித்தது யார் என இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு உரிய பதிலளிக்காமல் நீதிமன்ற உத்தரவு படி இடிப்பதாக அலட்சியப் போக்கில் பதில் கூறிவிட்டு விறுவிறுப்பாக கோயில் உள்ளே சென்று விட்டார். அம்மனி அம்மன் மடம் இடிக்கப்படும் விவகாரம் தொடர்பாக ஆன்மீக நகரமான திருவண்ணாமலை பக்தர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறி எழுந்ததுடன் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இடிப்பு விவகாரம் இந்து முன்னணி சேர்ந்தவர்களுக்கு தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து  30-க்கும் மேற்பட்டோர் அம்மனி அம்மன் மடம் இடிக்கும் பணியை தடுத்து நிறுத்தி இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் மடத்தை இடிக்கும் பணியை நிறுத்தி வைத்து ஜேசிபி இயந்திரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  இதனால் அம்மனி அம்மன் கோபுரம் அருகே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

 

அம்மணி அம்மாள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வடக்கு கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதனை கட்ட எண்ணம் கொண்டார். இதற்காக பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினை கட்டி முடித்தார். அதனால் அண்ணாமலலயார் கோவிலின் வடக்கு கோபுரம் அவரது பெயராலாயே அம்மணி அம்மன் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இவர் 17-ம் நூற்றாண்டின் இறுதியில் ஜீவ சமாதியடைந்தார். இவரது சமாதி ஈசான்ய லிங்க சன்னதிக்கு எதிரில் அமைந்து உள்ளது. இவரது பெயரில் வடக்கு கோபுரத்தின் அருகில் மடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மடம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Judi Bola Parlay