புதுடெல்லி: நீர் வழிப் போக்குவரத்தை அதிகரிக்க உள்நட்டில் உள்ள 23 நதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது. தேசிய அளவில் 111 நீர்வழித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், 23 நதியின் அமைப்புகள் போக்குவரத்துக்கு உகந்ததாகஉள்ளன. இவற்றை மேம்படுத்துவதன் மூலம் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவைகளை குறைந்த செலவில் மேற்கொள்ளலாம்.

குறிப்பாக, பிரம்மபுத்திரா நதிக்கரையை மேம்படுத்துவதன் வாயிலாக தொழில் வளர்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என்பதுடன் அது பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

பிரம்மபுத்திரா கிராக்கர்ஸ் பாலிமர்ஸ் லிமிடெட் (பிசிபிஎல்) நிறுவனம், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாப்தாவை இறக்குமதி செய்கிறது. இதனை மேற்கு வங்க மாநிலம் ஹல்டியா துறைமுகத்தில் இறக்கி, அஸ்ஸாமில் உள்ள திப்ருகருக்கு 500 லாரிகள்மூலம் பிசிபிஎல் கொண்டு செல்கிறது. இதனால், சுற்றுச்சூழலில் அதிக மாசுபாடு ஏற்படுகிறது.

எனவே, சாலைப் போக்குவரத்துக்கு பதிலாக நீர்வழிப் போக்குவரத்தை அதற்கு மாற்றாக பயன்படுத்தும்போது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், சரக்குப்போக்குவரத்துக்கான செலவின மும் குறிப்பிடத்தக்க அளவு குறையும். இந்திய நீர்வழிப் போக்குவரத்து துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை தொழில்முனை வோர் சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி முன்னேற்றம் காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *