Loading

`கச்சரப்பாளையம் என்ற இடத்தில் மின்சாரம் இன்றி நாடகம் பாதியிலேயே நின்றுபோனது. பக்கத்து கடைகளில் இருக்கும் பெட்ரோமேக்ஸ் விளக்குகளைப் பயன்படுத்தியும், நாடகக் குழு பயன்படுத்தி வந்த வேனின் பேட்டரி மூலமும் ஒலிபெருக்கியை இயக்கியும், நாடகத்தை வெற்றிகரமாக முடித்தோம்’ என்று தன் அனுபவத்தை `முரசே முழங்கு’ நாடகத்தின் நிறைவு விழா மலரில் குறிப்பிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். `முரசே முழங்கு’ நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, `வெற்றி நமதே’, `நாளை நமதே’, அறிஞர் அண்ணாவின் `நீதி தேவன் மயக்கம்’ போன்ற பல்வேறு நாடகங்களில் மு.க.ஸ்டாலின் நடித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இவை பெரும்பாலும் தி.மு.க-வின் கொள்கைகளைப் பரப்பும் நாடகங்களாவே இருந்திருக்கின்றன. இளம் பிராயத்தில் இருந்தே ஸ்டாலின் கழகத்தின் அணுக்கத் தொண்டனாக இருந்து வந்திருக்கிறார். அன்று கலைஞரின் வேடம் தரித்த மு.க.ஸ்டாலின் இன்று கலைஞர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பும் மாபெரும் அரசியல் பொறுப்பில் இருக்கிறார். தன்னுடைய 69-வது அகவையைப் பூர்த்தி செய்யும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம். அரசே முழங்கு!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *