நடிகர் பிரபாஸ், நடிகை கிருத்தி சனோன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. இப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறார். ராமாயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கும் இப்படத்தில் ராமர் வேடத்தில் பிரபாஸு ம், சீதை வேடத்தில் கிருத்தி சனோனும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் டிரெய்லர் சுமாரான கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக விமர்சனங்களைச் சந்தித்த நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதியுடன், மீண்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே ‘ஆதிபுருஷ்’ படப்பிடிப்பின்போது பிரபாஸும்,  கிருத்தி சனோனும் காதல் வயப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், அவர்களுக்கு மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும் வதந்திகள் பரவிய நிலையில் அது குறித்து கிருத்தி சனோன் விளக்கமளித்துள்ளார். 

கிருத்தி சனோன்

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த கிருத்தி சனோன், “எங்கள் இருவருக்கும் இடையில் காதல் போன்ற எந்த ஒரு உறவும் இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். சமூக வலைதளங்களில் எங்களுடைய திருமணத் தேதியை அறிவிக்கும் முன்னர், இந்த வதந்தியை நான் உடைக்க விரும்புகிறேன். இந்த வதந்திகள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை” என்று தெரிவித்திருக்கிறார். 

அதேபோல, பிரபாஸ் – கிருத்தி சனோன் காதல் தொடர்பாக  வெளியாகும் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகள், அவர்கள் இருவரும் நண்பர்கள்தான். அவர்கள் குறித்துப் பரவிவரும் தகவல் எதுவும் உண்மையில்லை என்று பிரபாஸ் தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Judi Bola Parlay