இடைத்தேர்தல்: தினகரன் பின்வாங்கிய பின்னணி..!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ.க-வின் அழுத்தம், பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும் ஆதரவை வைத்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக இரட்டை இலையை வசப்படுத்திய பழனிசாமியின் திட்டம் போன்ற காரணங்களால் பன்னீர்செல்வம் தரப்பு போட்டியிலிருந்து விலகிக்கொண்டது.
இந்த நிலையில், டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க சார்பில் போட்டியிட, 29 வயது இளைஞரான பொறியியல் பட்டதாரி சிவபிரசாந்த் பிப்ரவரி மூன்றாம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் போட்டியிட முயன்றதால், அ.ம.மு.க-வையும் களமிறக்கி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் எனக் கணக்கு போடப்பட்டதாம்.
ஆனால் அப்படி கணக்கு போட்ட தினகரனின் பிளான் தோல்வியடைந்திருக்கிறது.
அதன் பின்னணி குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
எடப்பாடி ‘ரூட் கிளியர்’ … சிதறாமல் கிடைக்குமா வாக்குகள்?!
கள நிலவரம் எப்படி..?
கட்சி நிர்வாகிகள் சொல்வது என்ன..?
விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
கழுகார்: அண்ணாமலையால் கொதிக்கும் OPS தரப்பு!

கமலாலயத்திலும், சமூக வலைதளங்களிலும்தான் காவிக் கட்சி நிர்வாகிகளுக்குள் கோஷ்டிச் சண்டை என்றால், கட்சி பலமாக இருப்பதாகச் சொல்லப்படும் மேற்கு மாவட்டத்திலும் உட்கட்சி மோதல் ஊரறிய நடக்க ஆரம்பித்திருக்கிறது.
மாஜி காக்கியின் நிழலாக வலம்வரும் ‘கந்த’ கடவுள் பெயர்கொண்ட மாநில நிர்வாகிக்கும், மேற்கு மாவட்டத்தின் தலைவருக்கும் இடையிலான பஞ்சாயத்து, கட்சி ஆலோசனைக் கூட்டத்திலேயே எதிரொலித்திருக்கிறது.
கழுகார் அப்டேட்ஸில் மேலும்…
புலம்பும் அமைச்சர்… தெறிக்கும் நிர்வாகிகள்!
‘அண்ணாமலை அறிக்கையால் ஓ.பி.எஸ் தரப்பு கொதிப்பு!
“நானும்தான் மண்ணின் மைந்தன்…” – கதறும் அமைச்சர் தரப்பு!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
குழந்தை பெற்றுக்கொண்ட இந்தியாவின் முதல் திருநர் தம்பதி!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசித்துவரும் திருநர் தம்பதி ஷியா பவுல் – ஸஹத். இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ஷியா பவுல் ஒரு நடனப் பயிற்சியாளர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஸஹத் முன்பு டெக்னோபார்க்கில் வேலை செய்துவந்தார். இவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். இந்த நிலையில், ,மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.
மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
ஹிண்டன்பர்க் effect… பிரான்ஸ் ஒப்பந்தத்தை இழந்த அதானி!

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானிக்குத் தொடர்ச்சியாக அடி மேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது. அதானி குழும நிறுவனப் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அதானி நிறுவனத்தின் கடன் பத்திரங்களை அடமானமாக ஏற்க கிரெடிட் சூயிஸ், சிட்டி குழுமம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில், அதானி குழுமம் பிரான்ஸ் நிறுவன ஒப்பந்தத்தை இழந்து அடுத்த அடியைச் சந்தித்துள்ளது.
இது குறித்த செய்தியை விரிவாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க…
‘பேரீச்சம்பழம், பால்…’ – தவறான நம்பிக்கைகள்!

சத்தான சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது கடந்த 5 வருடங்களுக்குள்ளாகவே 50 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துவிட்டது. சத்து என்று நினைத்துக்கொண்டு உலர் பழங்களைச் சாப்பிட்டு உடல் பருமன் அடைவதுதான் மிச்சம்.
‘இரும்புச்சத்து குறைவாக உள்ளது, எனவே தினமும் நான்கு பேரீச்சம்பழம் சாப்பிடுங்கள்’ என்று மருத்துவர்களே சொல்வதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.
15 மில்லி கிராம் இரும்புச்சத்து உங்களுக்குக் கிடைக்க, நீங்கள் கிட்டத்தட்ட ஒன்றேகால் கிலோ பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும் என்ற கசப்பான உண்மையை யாரும் அறிவதில்லை.
இது குறித்த மேலும் விரிவான தகவல்களை இன்று வெளியான ஆனந்த விகடனில் இடம்பெற்றிருக்கும் ‘ஆரோக்கியம் ஒரு பிளேட்’ தொடரில் விவரிக்கிறார் டாக்டர் அருண்குமார்.
அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க…
சிப்பிக்குள் முத்து: ஆறு வயது சிறுவனாக அசத்திய கமல்!

80 S, 90S Cinemas
‘தெலுங்குப் படம்’ என்றாலே மலினமாக இங்குப் பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதற்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தந்தவர்களில் முக்கியமானவர் அண்மையில் மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத்.
அவரது இயக்கத்தில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற படங்களில் ஒன்று ‘சிப்பிக்குள் முத்து’ (சுவாதிமுத்யம்). 1986-ல் வெளியான இந்தப் படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்கிற பிரிவில், ஆஸ்கர் விருதிற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டது.
‘சிறந்த தெலுங்குத் திரைப்படம்’ என்கிற பிரிவில் தேசிய விருதையும் இது வென்றது.
‘சிப்பிக்குள் முத்து’ குறித்த சுவாரஸ்யமான அலசல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
ஆனந்த விகடன்- சினிமா விமர்சனங்கள்

இன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்ற
தலைக்கூத்தல்
ரன் பேபி ரன்
பொம்மை நாயகி
மைக்கேல்
தி கிரேட் இந்தியன் கிச்சன்
ஆகிய படங்களுக்கான விமர்சனங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…