kalakadu

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் நடைபெறும் வன உயிரினக் கணக்கெடுப்பு குறித்தப் பயிற்சியில் பங்கேற்றோர்.

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறைப் புலிகள் காப்பகத்தில் வன உயிரினக் கணக்கெடுப்புப் பணி நாளை முதல் எட்டு நாள்கள் நடைபெறுகிறுது.  இதில் வனத்துறைப் பணியாளர்கள் சுமார் 120 ஈடுபடுகிறார்கள். 

இதையடுத்து கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்களுக்கான பயிற்சி முண்டந்துறை வனச்சரகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. பயிற்சியில் அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை மற்றும் கடையம் வனச்சரகத்தைச் சேர்ந்த வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் 120 பேர் கலந்துகொண்டனர். 

பயிற்சியைத் தொடர்ந்து 4 வனச்சரகத்திற்குள்பட்ட 31 பீட் பகுதியில் நாளை முதல் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். பிப். 16 வரை நடக்கும் கணக்கெடுப்பில் சேகரிக்கும் வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் ஆகியவற்றைக் கொண்டு வன உயிரிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும்.

இதையும் படிக்க: ஈரோடு கிழக்கில் யாருக்கும் ஆதரவில்லை: டிடிவி தினகரன்

செல்லிடைப்பேசி செயலி மூலம் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்புப் பணி  குறித்து உயிரியலாளர் ஸ்ரீதர் மற்றும் ஆக்னஸ்  பயிற்சியளித்தனர். பயிற்சியில் வனச்சரகர்கள் பாபநாசம் ஸ்டாலின், கடையம் கருணாமூர்த்தி, முண்டந்துறை கல்யாணி, அம்பாசமுத்திரம் நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *