கொல்கத்தாவில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் 2023 ஏப்ரல்-மே மாதத்திற்குள் யுனெஸ்கோவிடமிருந்து உலகின் முதல் “வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்” என்ற அந்தஸ்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஐக்கிய நாடுகள் சபையின் கிளை நிறுவனமான யுனெஸ்கோ உலகில் உள்ள அழிந்து வரும் இடங்களை பாதுகாப்பதற்காக அதை உலக பாரம்பரிய இடங்களாக அறிவிக்கும்.  ஆனால் உலகிலேயே முதன்முறையாக ஒரு உறுதியான இயங்கி வரும் பல்கலைக்கழகத்திற்கு பாரம்பரியக்  குறியீடு வழங்கப்படும் இடமாக இது மாற இருக்கிறது.

1921 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரால் இந்த பல்கலைக்கழகம்  நிறுவப்பட்டது . இது மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதனில் அமைந்துள்ளது. மே 1922 இல்  விஸ்வபாரதி சொசைட்டி ஒரு அமைப்பாக பதிவு செய்யப்படும் வரை, அது நோபல் பரிசு பெற்ற கவிஞர்  ரவீந்திரநாத் தாகூரின் பெயரால் அழைக்கப்பட்டது.

யுனெஸ்கோவின் கூற்றுப்படி, கலைகள், மொழிகள், மனிதநேயம், இசை ஆகியவற்றில் ஆய்வுகள் கொண்ட கலாச்சார மையமாக 1922 ஆம் ஆண்டில் விஸ்வபாரதி திறக்கப்பட்டது. 1,130 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கதிற்காக தாகூர் தனது பங்களா, இடம், போன்றவற்றை சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ளார்.

சுதந்திரம் பெரும் வரை கல்லூரியாக இயங்கி வந்த இது பின்னர் பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிறுவனம் 1951 ஆம் ஆண்டு மத்திய சட்டத்தின் மூலம் மத்திய பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றது .இந்த நிறுவனத்தின் முதல் துணைவேந்தர் ரவீந்திரநாத் தாகூரின் மகனான ரதீந்திரநாத் தாகூர்  பணியாற்றியுள்ளார்.

ரவீந்திரநாத் தாகூர் நான்கு சுவருக்குள் இல்லாமல் திறந்த வெளியில் காற்றோட்டமாக கல்வி கற்பிக்க வேண்டும் என்று நம்பினார். அந்த வழக்கம் இன்றும் அந்த பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்படுகிறது.

அதேபோல பாரம்பரியம்  மற்றும் கலாச்சார ஆய்வுகளில் சிறந்த கொள்கைகளை இன்றும் பின்பற்றும்  சிறந்த நிறுவனமாக உள்ளது . இவை இந்தி ஆய்வுகள் (இந்தி பவன்), சீன-ஆசிய ஆய்வுகள் (சீனா பவன்), மனிதநேயத்திற்கான மையம் (வித்யா பவன்), நுண்கலை நிறுவனம் (கலா பவன்) மற்றும் இசை (சங்கித் பவன்) ஆகியவற்றுக்கான நிறுவனங்களாக செயல்படுகின்றன.

2011 இல்  தாகூரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கலாச்சார முன்னெடுப்புகளுக்கும் அவர் நிறுவிய  சாந்திநிகேதனுக்கான அங்கீகாரம் வழங்குமாறு மத்திய கலாச்சார அமைச்சகம் யுனெஸ்கோவிடம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால்  11 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Judi Bola Parlay