கிருஷ்ணகிரியை அடுத்த ஓசூர் மாநகராட்சிப் பகுதியில், சிப்காட் மையங்கள் மற்றும் சில பகுதிகளில், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், கம்பெனிகள் இயங்கிவருகின்றன. இதனால், நாட்டின் `ஐடி ஹப்’ பெங்களூரு என்றால், தமிழகத்தின் `இண்டஸ்ட்ரியல் ஹப்’ ஓசூர் எனலாம். இந்த நிலையில், ஓசூரிலிருந்து, 75 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, பெங்களூரு கெம்பேகெளவுடா பன்னாட்டு விமான நிலையத்துக்குச் சென்றுதான் மக்கள் விமான சேவை பெறுகின்றனர். ஓசூரிலிருந்து இந்த விமான நிலையம் செல்ல, 3 – 5 மணி நேரமாகிறது.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்

இதனால், தொழில் வளர்ச்சியடையவும், மக்கள் பயன்பாட்டுக்காகவும், ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். Ude Desh ka Aam Nagrik (UDAN) என்ற திட்டத்தின் வாயிலாக, மத்திய அரசு குறைந்த விலையில் மக்களுக்கு விமான சேவை வழங்க, புதிய விமான நிலையங்களை அமைத்துவருகின்றன. இந்தத் திட்டத்திலாவது ஓசூரில் விமான நிலையம் அமையுமென்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி வில்சன், ஓசூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த, மத்திய போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே சிங், “Regional Connectivity Scheme (RCS), UDAN திட்டத்தின் முதல் ஏலத்தில், சென்னை – ஓசூர் – சென்னை விமான நிலையம் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால், ஓசூர், பெங்களூரு கெம்பேகெளவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, 150 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கிறது.

மத்திய இணை அமைச்சர் வி.கே சிங்

மத்திய இணை அமைச்சர் வி.கே சிங்

இந்த விமான நிலையத்துடன் மத்திய அரசு செய்திருக்கும் ஒப்பந்தத்தில் (Concession Agreement – CA), 2033-க்குள் இந்த விமான நிலையத்திலிருந்து, 150 கிலோ மீட்டர் தொலைவுக்குள் (மைசூர் மற்றும் ஹசான் விமான நிலையங்கள் தவிர்த்து), புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது; ஏற்கெனவே இருக்கும் விமான நிலையங்களில் புதுப்பிப்பு, விரிவாக்கம் செய்யக் கூடாது எனக் கூறப்பட்டிருக்கிறது. CA ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது. UDAN திட்டத்துக்கான எதிர்வரும் ஏல பட்டியலிலிருந்து, ஓசூர் – சென்னை வழி விமான நிலையம் தகவல்கள் அகற்றப்படுகின்றன’’ என பதிலளித்திருக்கிறார்.

‘தமிழ்நாட்டின் நலனுக்கு கேடு’!

தி.மு.க எம்.பி வில்சன் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “ `ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது. மேலும், இனிவரும் ஒப்பந்தத்திலிருந்து ஓசூர் நீக்கப்படுகிறது’ என மத்திய இணை அமைச்சர் கூறிய பதிலைக் கேட்டு, அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தேன்.

தி.மு.க எம்.பி வில்சன்

தி.மு.க எம்.பி வில்சன்

பெங்களூருக்கு அருகிலுள்ள மைசூர், ஹசான் விமான நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கும்போது, முக்கிய தொழில் பகுதியாக திகழும் ஓசூருக்கு ஏன் அதே அளவுகோல் பொருந்தக் கூடாது. ஓசூருக்கு சிறப்பானதொரு விமான இணைப்பு இருக்க வேண்டாமா… பொதுநலனுக்கு எதிரான, தமிழ்நாட்டின் நலனுக்கு கேடு விளைவிக்கும் இது போன்றதொரு ஒப்பந்தத்தில், இந்திய அரசு எப்படி கையெழுத்திட முடியும்… இத்தகைய ஒப்பந்தப் பிரிவு செல்லாது. UDAN திட்டத்தில் ஓசூரை இணைக்க வேண்டும்’’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சரின் இந்த விளக்கத்துக்கு, ஓசூர் தொழில்துறையினர், தி.மு.க., இதர அரசியல் கட்சியினர், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன், பா.ஜ.க-வைச் சாடிவருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: