ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக கிரானைட் கற்களைக் கடத்தி, தமிழ்நாட்டிலுள்ள கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை அடைவதற்காக குறிப்பிட்ட சில வழிகளைக் கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதும் தெரியவந்திருக்கிறது. அதன்படி ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் நதிமூரிலிருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் வரதானபள்ளி வழியாகவும், ஓ.என்.கொத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பனபள்ளி வழியாகவும், சித்தூர் மாவட்டம் மோதியசெனுவிலிருந்து வேலூர் மாவட்டம் பாச்சூர் வழியாகவும் கிரானைட் கடத்தப்படுகிறது.

ஆந்திரா, தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ஆந்திரப் பிரதேச கிரானைட் மாஃபியா கும்பலின் ஒத்துழைப்போடு இந்தக் குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்பது பரவலாக நம்பப்படுகிறது. எனவே, ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் புகார் கடிதத்தை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புக்கும், ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் ஜவகர் ரெட்டிக்கும் அனுப்பியிருக்கிறார்.