Loading

3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

தொழில்துறை தேவையையும் இளைஞர்களையும் திறனையும் ஒருங்கிணைக்க `30 ஸ்கில் இந்தியா மையங்கள்’ அமைக்கப்படும்.

ஏஐ, கோடிங் உள்ளிட்ட புதிய திறன் பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க  முடிவு.

பெண்களுக்கான சேமிப்பு

7.5 சதவிகித வட்டியில் பெண்களுக்கான சேமிப்பு பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு பெண்கள் / பெண் குழந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டம் 7.5 சதவிகித வட்டியில், அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்களின் அதிகபட்ச சேமிப்பு வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் வங்கி பணபரிவர்த்தனை

ஆன்லைன் வங்கி பண பரிவர்த்தனை அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜாயிண்ட் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ.15 லட்சம் வரை பரிவர்த்தனை செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருட்கள் மீது வரி உயர்வு

புகையிலைப் பொருட்கள் மீதான வரி 16% வரை அதிகரிக்கப்படும். இதனால் சிகரெட்டின் விலை கடுமையாக அதிகரிக்கலாம்.

சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டியை 1% குறைக்க புதிய திட்டம் கொண்டு வரப்படும்.

மொபைல், டிவி உதிரி பாகங்களுக்கு இறக்குமதி வரி விலக்கு

மொபைல் உற்பத்திக்கான பாகங்களை இறக்குமதி செய்ய சலுகைகள் அறிவிப்பு. டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைப்பு. லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரிவிலக்கு தொடரும்.

கேமரா லென்ஸ்கள் மற்றும் தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும். 

வருமான வரி எவ்வளவு

புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி கிடையாது.

தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும். 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *