மத்தியப் பிரதேசத்தில் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த உமாபாரதி, மாநிலத்தில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்று கோரி போராடி வருகிறார். மதுபானக்கடைகளால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டி வருகிறார். கடந்த சனிக்கிழமை போபாலிலுள்ள கோயில் ஒன்றுக்கு உமா பாரதி சென்றார். அப்போது, கோயிலுக்கு அருகில் மதுபானக்கடை இருந்தது. உடனே புதிய மதுபானக்கொள்கையை அறிவிக்கும் வரை கோயிலில் இருக்கப்போவதாகக் கூறி, நான்கு நாள்களாகத் தொடர்ந்து கோயிலில் இருந்தார். `மதுசாலா மெ கெளஷாலா’ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினார். ஆனால், மாநில அரசு புதிய மதுபானக்கொள்கையை அறிவிக்கவில்லை.

உமா பாரதி

உமா பாரதி

இதனையடுத்து தனது கோயில் உள்ளிருப்பு போராட்டததை கைவிட்ட உமா பாரதி, நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “நிவாரி மாவட்டத்தில் ஓரிச்சா என்ற இடத்தில் ராம் ராஜா சர்கார் கோயில் அருகில் மதுக்கடை இருக்கிறது. எனவே புதிய மதுபானக்கொள்கைக்காக காத்திருக்காமல், விதிகளை மீறி செயல்படும் மதுக்கடைகள் இருக்கும் இடத்தில் பசு தொழுவத்தை தொடங்கவிருக்கிறேன். மக்களிடம் 11 பசு மாடுகளை ஏற்பாடு செய்து, அவற்றை மதுக்கடைகளுக்கு வெளியில் கட்டுவேன். என்னைத் தடுக்க யாருக்கு துணிச்சல் இருக்கிறது என்று பார்க்கிறேன். இந்த மாடுகளுக்கு உணவு கொடுத்து தேவையான தண்ணீரை மதுக்கடையிலிருந்து வாங்கிக் கொடுப்பேன். ராமர் பெயரில் அரசு உருவாக்கப்பட்டது. ஆனால், ராமர் கோயிலுக்கு அருகில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

ம.பி முதல்வர் சௌஹான்

ம.பி முதல்வர் சௌஹான்

மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. இதற்கு மதுதான் முக்கிய காரணமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் மந்திர சக்தியால் பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. ஜனநாயகத்தில் நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் என யாரையும் தேர்ந்தெடுக்க மக்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அரசை உருவாக்குவது பெரிய காரியம் கிடையாது. சமுதாயத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும்தான் முக்கியம். குஜராத்தில் மதுவுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதால், பெண்கள் இரவில் சுதந்திரமாக வெளியில் வந்து பேல்புரி சாப்பிட முடிகிறது” என்று தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *