சட்டசபை தேர்தலில் சீட் பெறுவதற்கு, காங்கிரசை பொறுத்தவரை, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, சிவகுமார் முடிவு எடுக்க வேண்டும் என்பது தெரிந்த விஷயமே. ம.ஜ.த.,வில் குமாரசாமி எடுக்கும் முடிவே இறுதியானது.

ஆளுங்கட்சியான பா.ஜ.,வுக்கு வந்தால் யார், யாருக்கு காட்பாதர் என்றே தெரியாத சூழ்நிலை நிலவுகிறது. இவ்வளவு நாட்களாக பலருக்கு காட்பாதராக திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவர் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டுள்ளதால், தேசிய அமைப்பு பொது செயலர் சந்தோஷை நாடி பலரும் செல்கின்றனர்.

அதிருப்தி அடைந்துள்ள எடியூரப்பா, தான் கூறும் 50 சதவீதம் பேருக்கு வாய்ப்பு தரும்படி மேலிடத்துக்கு அதிரடி கட்டளை இட்டுள்ளாராம். இதற்கு அதிர்ந்து போயுள்ள மேலிடம், வேறு வழியின்றி நிபந்தனையுடன் தலையை ஆட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் பகைத்து கொண்டால், கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்புள்ளதால், எந்த வகையிலும் அவரை பகைத்து கொள்வது வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம். அதே வேளையில், சந்தோஷும் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆர்.எஸ்.எஸ்., மூத்த பிரமுகர்கள் சீட் கேட்டு அவரிடம் செல்வதாகவும் கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *