Loading

tamizhachi_4

ஓமன் மசூதியில் தமிழச்சி தங்கபாண்டியன்

ஓமன்: ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஓமனில் உள்ள மிகப்பெரிய மசூதிக்குச் சென்றிருந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களை நேற்று அவர் டிவிட்டரில் பகிர்ந்திருந்த நிலையில், ஓமன் மசூதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்று பகிரப்பட்டுள்ளன.

இதையும் படிக்க.. புதிய மாணவர் சேர்க்கை நிறைவு: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி எங்கே?

ஓமனின் தலைநகராக விளங்கும் மஸ்கட்டில் அமைந்திருக்கிறது சுல்தான் கபூஸ் பெரிய மசூதி.  இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடையுடன் சென்று மசூதியைப் பார்த்து பிரமித்துப் போனார் தமிழச்சி தங்கபாண்டியன்.

இதையும் படிக்க.. அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட 3-ல் 2 பங்கு உரிமையாளர்கள் ஒப்புதலே போதும்!

அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, ஷார்ஜாவில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் பல்துறை ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன். மாநாட்டில் உரையாற்றும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அதில், ஆற்காடு இளவரசரின் வாரிசு மற்றும் திவான் நவாப்சாதா முகமது ஆசிப் அலி மற்றும் வழக்கறிஞர் – சட்ட மற்றும் பொருளாதார ஆலோசகர் அலி காலித் அல்-ஹம்மதி ஆகியோருடன் ஜனவரி 22ஆம் தேதி மாநாட்டை துவக்கி வைத்ததில் மகிழ்ச்சி என்றும் தமிழச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், வலிமை தமிழச்சி என்ற திட்டத்தின் கீழ், ஆசிரியர்களின் கற்பித்தல் – மாணவர்களின் கற்பது: இடையேயான விரிசல் என்ற தலைப்பில் உரையாற்றியது குறித்தும் பெருமைப்படுவதாகவும் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்திருந்தார்.
 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *