Loading

உலகின் தொன்மை நாகரீகமான எகிப்து நாகரீகத்தின் மேன்மைகள் அங்கிருக்கும் மம்மிக்களால் தான் வெளிப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மிக்களைக் கூட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மம்மிக்கள் என்பது வெறும் சவங்கள் அல்ல. அதற்குள் இறந்து அடக்கம் செய்யப்பட்ட மனிதன் வாழ்ந்த காலத்திய பொருட்கள், கலை வடிவங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவைகளும் புதைக்கப்பட்டுள்ளன. அவைகள் கெட்டும் சிதைந்தும் போகாமல் அந்தக் காலத்திய மனித வாழ்க்கையின் அடையாளங்களை சுமந்து கொண்டிருக்கின்றன.

அண்மைக் காலமாக எகிப்தின் தொல்லியல் துறை தங்கள் இனத்தின் கலாச்சார தொன்மையை மேலும் உலகிற்கு அறிவிக்கும் நோக்கில் ஏராளமான அகழ்வாய்வுகளை செய்து வருகிறது. அப்படி எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு தெற்கே உள்ள சக்காராவில் தற்போது அகழாய்வு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் தான் உலகின் மிகப் பழமையான அரசர் அல்லாத சாதாரண மனிதனினான ஹெகாஷெப்ஸ் என்பவரின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரையின் மேற்பரப்பில் இருந்து சுமார் 15 மீட்டர் ஆழத்தில் புதைந்திருந்த மூன்று கல்லறைகள் தோண்டப்பட்டன. அதில் ஒன்றில் தான் ஹெகாஷெப்ஷ்-ன் மம்மி இருந்துள்ளது. அந்த மம்மி தங்க இலையால் போர்த்தப்பட்டிருந்தது.

இந்த மம்மி 4,300 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டத்தை சேர்ந்தது என்கிறார்கள் அராய்ச்சியாளர்கள். கிட்டத்தட்ட 4,300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஹெகாஷெப்ஸ்-சின் உடல் தங்க இலையில் போர்த்தப்பட்டு பூ வேலைப்பாடுகள் ஆன கல்லாலான சவப்பெட்டிக்குள் கிடத்தப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. அது சிதைவுறாமல் அப்படியே இருந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக எகிப்து நாட்டின் சுற்றுலாத் துறை சக்காராவில் ஏராளமான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ள இந்த மம்மிக்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு சுமார் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்கிறார் தொல்லியல் நிபுணரும் எகிப்தின் முன்னாள் பழமை பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜாஹி ஹவாஸ்.இந்தக் கல்லறைகளுக்குள் வெறும் மம்மிக்கள் மட்டும் இருக்கவில்லை. அந்தக் காலத்தைய மட்பாண்டங்களும், சிலைகளும் இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் மற்றொரு தொல்லியல் ஆராய்ச்சியாளர் அலி அபு தேஹிஸ்.

அதே போல் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற அகழாவில் ரோம சாம்ராஜ்யத்தை சேர்ந்த கி.பி 2ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு புதைநகரத்தையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  அந்த நகரில் மனிதர்கள் வாழ்ந்த வீடுகள், உலோக பட்டறைகளாக பயன்படுத்தப்பட் கோபுரம் போன்ற அமைப்புகள்           இருந்துள்ளன. மேலும், அந்த கோபுரைம் போன்ற அமைப்புகளில் பானைகள் நாணயங்கள் மற்றும் பல கருவிகளும் இருந்துள்ளன. இது போன்ற கண்டுபிடிப்புகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்பதால் அகழாய்வில் எகிப்து நாட்டு சுற்றுலாத்துறை முனைப்பு காட்டி வருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *