Loading

2023-ம் ஆண்டு தொடங்கிய பிறகு, சீனாவில் கோவிட் பாதிப்பு மரணங்கள் 80 சதவிகிதம் அளவுக்கு குறைந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

ஜப்பானில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். இதில் 6 பேர் சீனர்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF ) அதிகாரிகள், பாகிஸ்தானின் ஒன்பதாவது நிதியளிப்பு மறு ஆய்வுக்காக இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் செல்லவிருக்கின்றனர்.

ஜானவி கந்துலா என்ற 23 வயது இந்தியப் பெண் அமெரிக்காவில் போலிஸ் வாகனம் மோதியதில் பலியானார்.

இந்திய வாம்சாவளியைச் சேர்ந்த கணேஷ் தாகூர் என்பவர், டெக்சாஸ் அகாடமி ஆஃப் மெடிசின், இன்ஜினீயரிங், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் (TAMEST) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஜெர்மன் சாஃப்ட்வேர் நிறுவனமான எஸ்.ஏ.பி இந்த ஆண்டு 3,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் 4,300 ஆண்டுகள் பழைமையான மம்மி, ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது உலகின் மிகப் பழைமையான மம்மியாக இருக்கக் கூடும் என்கிறார்கள்.

வரலாறு காணாத வகையில் ,அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு, 255-ஆகக் குறைந்திருக்கிறது.

வெஸ்ட் பாங்க் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில், ஒன்பது பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியாவின் சானியா மிர்சா – போபண்ணா ஜோடி.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *