திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27 -ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பை கலெக்டர் விசாகன் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள தேர்வுகள் பாதிக்காத வகையில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மறுநாள் ஐனவரி 28 -ம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பழநி முருகன் கோயில்

ஜனவரி 27 -ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிவரை கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், கும்பாபிஷேகத்தைக் காண மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் காலை 4 மணி முதல் 7.15 மணிக்குள் மலைக் கோயிலுக்குச் சென்றுவிட வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக ரோப் கார் மற்றும் வின்ச் ஆகியவற்றில் 2 ஆயிரம் பக்தர்கள் யானை வழிப்பாதை வழியாக 4 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 6 ஆயிரம் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.  கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்களுக்கு மலர் தூவப்படவுள்ளது. அப்போது மலை மீது உள்ள பக்தர்கள் மீது கும்பாபிஷேகம் செய்த நீர் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் கும்பாபிஷேகத்தைக் காண விரும்பும் பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்து குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. வெளியூர் பக்தர்களுக்காக 26 -ம் தேதி இரவு 11 மணிவரை ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள வேலவன் விடுதியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பழநி கோயில்

கூட்டநெரிசலைத் தவிர்க்க பழநி-தாராபுரம் சாலையில் உள்ள மால்குடி மருத்துவமனை அருகே தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் அனைத்தும் தற்காலிகப் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்படும். அங்கிருந்து 30 இலவச சிறப்புப் பேருந்துகள் மூலம் பழநி நகருக்குள் வந்து மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள். மேலும் பழநி நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்த நான்கு இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு 1,500 வாகனங்கள்வரை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நிகழ்வையொட்டி 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்புக்காக 10 ட்ரோன் கேமராக்களும், 150 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு மலைக்கோயில் பாதை உள்பட அனைத்துப் பகுதிகளும் கண்காணிக்கப்படவுள்ளன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor