தனது விரிவாக்கத் திட்ட்த்தை இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் அமல்படுத்த உள்ளது; இத்திட்டத்தில் போபால், சூரத் உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமின்றி முக்கியமான 2ஆம் அடுக்கு சந்தைகளான இரிட்டி, அனகாபள்ளி, நான்டெட், வாபி, விழியநகரம் ஆகியவையும் அடங்கும். தனது உலகளாவிய விரிவாக்கல்

திட்டத்தின் கீழ் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, எகிப்து, கனடா, துருக்கி மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஸ்டோர்கள் திறக்க மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த எதிர்கால விரிவாக்கல் திட்டத்தினால் சில்லறை வர்த்தகம், உற்பத்தித் துறை, தொழில்நுட்பம் நிர்வாகம் ஆகிய துறைகளில் கிட்டத்தட்ட 6000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஆம்னி சேனல் முயற்சிக்கு மெருகூட்டும் விதமாக மைக்ரோசாஃப்ட், IBM, அக்சென்சர், E&Y, டெலாய்ட் போன்ற எமது முக்கிய தொழில்நுட்பக்கூட்டு நிறுவனங்களின் சேவைகளும் கோரிப் பெறப்படுகின்றன.
வசதியுடன் கூடிய ஆபரணம் வாங்கும் அதியற்புத அனுபவத்தைத் தருவதில் உலகப்புகழ் பெற்றுள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்காக ’10 மலபார் வாக்குறுதிகள்’ என்கிற தலைப்பில் அவர்களுக்கேற்ற கொள்கைகளுடன் ஒப்பற்ற தரம்/சேவை உத்தரவாதமும் தருகிறது. வாழ்நாள் முழுவதற்குமான பாராமரிப்பு, இலவசக் காப்பீடு, உத்திரவாத்த்துடன் கூடியா பை-பேக் வசதி, IGI, GIA – தரச்சான்றிதழ் பெற்று உலகெங்கும் நடத்தப்படும் 28-அம்ச தரச்சோதனைகளில் தேறிய நகைகள், தங்க பரிவர்த்தனையில் ஜீரோ கழிவு, பரிபூான ஒளிவுமறைவின்மை, 916-ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய தூய தங்கம், பொறுப்பான முறையில் தங்கம் பெறுதல், நியாய விலை, நியாயமான தொழிற்பயிற்சி உட்பட அனைத்தும் ‘மலபார் வாக்குறுதிகளில் அடங்கும்.




பொறுப்பான முறையில் தங்கத்தைக் கொள்முதல் செய்தல், தார்மிக முறையில் தொழில் பயிற்சி செய்தல், ஒளிவுமறைவற்ற, தொழில்முறை நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் விதிமுறைகளை ஒன்று விடாமல் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் & பின்பற்றிவருகிறது. வெற்றிகரமாகச் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள் பொறுப்புணர்வு, நீடித்து நிலைக்கும் தன்மையைத் தனது முக்கியத் தொழிற்பயிற்சியாக ஆக்குவதாக மலபார் குழுமம் நம்புகிறது.