386 ரன்களை இலக்காகக் கொண்டு ஆலன்- கான்வே இணை களமிறங்கியது. ஆனால், நியூசிலாந்துக்கு ஆரம்பமே சரியில்லை. முதல் ஒவரை ஹர்திக் வீச, ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஆலன் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். பிறகு, நிக்கோல்ஸ் – கான்வே இணை, நிதானித்து ஆடினர். பிறகு, 6 ஓவர் முடிவில் 36/1 என ஸ்கோர் செய்தது. பிறகு, நிக்கோலஸ் அதிரடிகாட்ட, கான்வேயும் அதிரடியாக ஆடத்தொடங்கினர். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வரத் தொடங்கி, ஸ்கோரும் உயரத் தொடங்கியது. 9 ஓவர் முடிவில் 68/1 என ஸ்கோர் இருந்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் பிறகு, ஷர்துல் நன்கு பந்துவீசத் தொடங்கினார். உம்ரான் மாலிக், குல்தீப்பும் நல்ல பங்களிப்பை தந்தனர். நிதானமாக ஆடிய கான்வே 14வது ஓவரில் தனது சிக்ஸர் மூலம் தனது அரைசதத்தை எட்டினார் .

15 வது ஓவரில் அணி 100 ரன்களை எட்டியது . ஆனால், அதே ஓவரில், குல்தீப்பின் பந்தில் LBW முறையில் அவுட் ஆனார், நிக்கோலஸ் 42 ரன்கள் எடுத்தநிலையில் வெளியேறினார். டேரில் மிட்செல் அடுத்ததாக களமிறங்கினார். கான்வே பேட்டில் இருந்து அவ்வப்போது பவுண்டரி வந்தன. ஆனால், சிங்கிள் ரன்கள் நிறைய எடுத்தனர். கடந்த பேட்டியில் மெய்டன் ஒவரே பல இருந்தன. இந்த முறை அதனை சரி செய்துயிருந்தனர். கான்வே- மிட்செல் நிதானமான ஆட்டம் காரணமாக 22 ஒவர் முடிவில் நியூசிலாந்து 151/2 என்ற நிலையில் இருந்தது. 24 வது ஓவரின் முதல் இரண்டு பந்திலும் அடுத்தடுத்த சிக்ஸர் மூலம் கான்வே தனது சதத்தை எட்டினார். சிங்கிள்ஸ் மூலம் ரன்களை சிறுக சேர்த்தது இந்த இணை, ஆனால், 26 ஆவது ஓவரை வீச வந்த ஷர்துல் டேரில் மிட்செல் விக்கெட்டை வீழ்த்த, அடுத்த பந்திலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லேதமை ”டக் அவுட்” செய்து வெளியேற்றினார், தாகூர்.இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தடுத்து விக்கெட் சாய்ந்தாலும், அதே ஓவரின் இறுதி இரு பந்திலும் கான்வே பவுண்டரிகளை விளாசினார். 27 ஓவர் முடிவில் 197/4 என நியூசிலாந்து அணி ஸ்கோர் செய்தது. 28 வது ஓவரில் பெரிதும் எதிர்பார்த்த பிலிப் விக்கெட்டையும் ஷர்தூல் வீழ்த்தினார். அணி வெற்றிக்காக கான்வே போராட, பிற வீரர்கள் உதவினாலும், நிலைத்து நிற்க தவறினர், 32 வது ஓவரில் தனது விக்கெட்டை, உம்ரான் மாலிக்கிடம் விட்டுக்கொடுத்து 138 ரன்களுக்கு வெளியேறினார், டெவன் கான்வே. 32 ஓவர் முடிவில் நியூசிலாந்து 230/6 ஸ்கோர் செய்தது. ஆனால், இந்திய பௌலர்களின் அட்டகாசமான பந்துவீச்சு அடுத்தடுத்த விக்கெட்டை சீரான இடைவெளியில் எடுக்க 42 வது ஓவரின் 2 வது பந்தில் 10 வது விக்கெட்டாக சாண்டனரின் விக்கெட்டை சஹல் எடுக்க 295 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, நியூசிலாந்து. இதனால் இப்போட்டியை 90 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இந்தியா.

அதோடு 3-0 என்ற கணக்கில் க்ளின் ஸீவீப்பாக தொடரையும் கைப்பற்றியது, இந்திய அணி. ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூரும், தொடர் நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டனர். தொடர் வெற்றிகளின் காரணமாக இந்திய அணி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேற்றியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor