கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் கொலை செய்யப்பட்டார்.
போச்சம்பள்ளி வட்டம் மத்தூர் அருகே குள்ளம்பட்டி சந்தம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்த சாமியின் மனைவி மாதம்மாள் (50). இவருக்கும் அவரது கணவரின் சகோதரர் சரவணனுக்கும் இடையே பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், பொது கிணற்றுக்கான மின் மோட்டாரின் பியூஸ் கெரியரை மாதம்மாள் எடுத்துள்ளார்.