ஆசியாவின் இரண்டாவது பெரிய செல்வந்தராக இருந்தவர், சீனாவைச் சேர்ந்த ஹூய் கா யான். இவரின் சொத்து மதிப்பு தற்போது 93 சதவிகிதம் சரிந்துள்ளது. 

93 சதவிகிதம் சரிவு

ஹூய் கா யான் `எவர் கிராண்ட்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர். நிலங்களையும், கட்டிடங்களையும் விற்பது புதுப்பிப்பது என விரைவாக வளர்ந்த இந்நிறுவனத்தின் மதிப்பு, ஒருகாலத்தில் 42 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்நிறுவனத்தின் வளர்ச்சியே இவரை 2017-ல் ஆசிய செல்வந்தர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு அழைத்துச் சென்றது. 

இந்நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 280 நகரங்களில் 1,300 கட்டட வேலைகளில் ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம். 2020-ல் இந்நிறுவனத்தின் விற்பனை 110 பில்லியனுக்கும் அதிகமாக இருந்தது.

எவர்கிராண்டே குழுமம்

ஆனால் 2021-ல் ஏற்பட்ட 300 பில்லியன் கடன் நெருக்கடியை ஈடுகட்ட, தனது வீடு மற்றும் தனியார் ஜெட் மற்றும் விமானங்களை விற்கத் தொடங்கினார். இதனால் இவரின் சொத்து மதிப்பு 93 சதவிகிதம் சரிந்துள்ளது.

இதுகுறித்து ஹூய் கா யான் கூறுகையில், `தன்னுடைய நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் எவர்கிராண்டே குழுமம், ஒரு நிறுவனமாகத் தனது கடமையை நிறைவேற்றுவதற்கும், சாத்தியமான எல்லா வழிகளிலும் திட்டங்களை வழங்குவதற்கும் 2023 ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும்’ என கூறியுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *