மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் விளையாட, பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரென்கா தகுதி பெற்றார். காலிறுதியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் (28 வயது, 3வது ரேங்க்) நேற்று மோதிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை அசரென்கா (33 வயது, 24வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன், அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி ஜெஸ்ஸிகாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த அவர் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 37 நிமிடத்துக்கு நீடித்தது.

2013 ஆஸி. ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற அசரென்கா, அதன் பிறகு இந்த தொடரில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் எலனா ரைபாகினா (23 வயது, 25வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் லாத்வியா வீராங்கனை யெலனா ஓஸ்டபென்கோவை (25 வயது, 17வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 19 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செக் குடியரசின் ஜிரி லெஹக்காவுடன் (21 வயது, 71வது ரேங்க்) மோதிய கிரீஸ் நட்சத்திரம் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (24 வயது, 4வது ரேங்க்) 6-3, 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ரஷ்யாவின் கரென் கச்சனோவுடன் (26 வயது, 20வது ரேங்க்) மோதிய அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா (22 வயது, 31வது ரேங்க்) 6-7 (5-7), 3-6, 0-3 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து கச்சனோவ் அரையிறுதிகு தகுதி பெற்றார். கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் சானியா மிர்சா – ரோகன் போபண்ணாவுடன் மோதுவதாக இருந்த ஓஸ்டபென்கோ (லாத்வியா) – டேவிட் ஹெர்னாண்டஸ் (ஸ்பெயின்) ஜோடி காயத்தால் விலகியதை அடுத்து இந்திய ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor