செய்திப்பிரிவு

Last Updated : 24 Jan, 2023 10:33 PM

Published : 24 Jan 2023 10:33 PM
Last Updated : 24 Jan 2023 10:33 PM

கோப்புப்படம்

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக ஆண்டர்சன் சாலை நாளை (ஜன.25) முதல் மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக 25.01.2023 புதன் கிழமை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

  • மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.
  • பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
  • கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, டேங்க் பண்ட் சாலை, சந்திரயோகி சமாதி தெரு மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். (அல்லது)
  • கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, ஒட்டேரி சந்திப்பு, குக்ஸ் சாலை மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். (அல்லது)
  • கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, போர்சுகீஸ் சாலை, கான்ஸ்டிபள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை வழியாக செல்லலாம்.
  • கான்ஸ்டிபள் சாலையில் பில்கிங்டன் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல கூடிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
  • கனரக வாகனங்கள் கான்ஸ்டிபள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபள் சாலை, போர்சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
  • கொன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை வழியாக செல்லலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor