மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) ராசியில் சனி, சூரியன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு – சுக ஸ்தானத்தில் ராகு – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது – விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் முயற்சிகள் வெற்றி பெறும். நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்குவன்மை நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பெண்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணமுடக்கம் நீங்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.

பரிகாரம்: பெருமாளை வணங்கினால் நல்லது

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) ராசியில் சுக்ரன் – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் புதன் – விரைய ஸ்தானத்தில் சனி, சூரியன் என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் அனுகூலம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த இழுபறியான நிலை மாறும். சாதாரணமாக செயல்பட்டாலும் அது மிகப் பெரிய வெற்றி பெறும். வாகனப் பிராப்தி ஏற்படும். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் இருந்த தடங்கல்கள் அகலும். பணவரத்து கூடும். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெருமைகள் உண்டாகும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.

பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்..

பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்குவது

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) ராசியில் குரு – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் புதன் – லாப ஸ்தானத்தில் சனி, சூரியன் – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலை இருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் வெற்றி கிடைக்கும். பயணங்கள் குறிக்கோள் உள்ளவைகளாக மாறும். அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை அகலும். திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் நீங்கும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்குவது | இந்த வாரம் கிரகங்களின் நிலை:

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.26 – பிப்.1 வரை

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor