சீனாவின் பொருளாதார நிலை கொரோனாவால் அழிவின் விளிம்பில் உள்ளது. இங்கு ரியல் எஸ்டேட் துறையில் அதிகபட்ச நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இத்துறையில் உள்ள மாபெரும் நிறுவனமான எவர்கிராண்டே குழுமத்தின் (Evergrande Group)  நிலையே தாக்குபிடிக்க முடியாமல் உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், குழுமத்தின் தலைவரும், சீனாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமான ‘ஹுய் கா யான்’ என்பவரின் சொத்துக்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மூன்றே ஆண்டுகளில்,  தொழிலில் உச்சத்தில் இருந்த தொழிலதிபர்கள்  கீழே வந்து விட்டனர்.  இதற்கு முக்கிய காரணம் கொரோனா என்று கூறப்படுகிறது.

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சுனாமியால், நிறுவனங்களின் மீதான கடன் சுமையினால் , சீன கோடீஸ்வரான யானின் சொத்து மதிப்பு 93 சதவீதம் குறைந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஹுய் கா யான் $ 42 பில்லியன் சொத்துக்களைக் கொண்டிருந்தார், அதில் $ 39 பில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிபோயின. இப்போது எவர்கிராண்டே குழுமத்தின் தலைவர் யானின் நிகர சொத்து மதிப்பு $3 பில்லியன் மட்டுமே உள்ளது.

யான் மட்டுமல்ல, கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து, சீனாவின் 5 பணக்கார ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் மொத்தமாக 65 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளன. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் மிகவும் வெற்றிகரமான தொழிலதிபரான எவர்கிராண்டே குழுமத்தின் தலைவர் 2020 ஆம் ஆண்டிலேயே நாட்டின் இரண்டாவது பணக்காரராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இப்போது அவர்  பெரும் நஷ்டத்தை சந்தித்த வணிகர்களில் ஒருவராக கணக்கிடப்படுகிறார். 

மேலும் படிக்க | பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை ‘இறக்குமதி’ செய்யும் சீனா!

குறிப்பிடத்தக்க வகையில், கடந்த மூன்று வருடங்கள் அவருக்கு பெரும் போராட்டமாக இருந்தது. எவர்கிராண்டே மீது கடன் அழுத்தமும் உள்ளது. இப்போது நிறுவனம் திவாலாகும் நிலையில் உள்ளது. 2019 ஆம் ஆண்டில், நிறுவனத்தால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. கொரோனா காலமாக பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. கடன் பிரச்சினைகளைத் தீர்க்க, நிறுவனம் அதன் சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

யான் நிறுவனத்தின் நிலை மோசமாகிய நிலையில், கடன் நெருக்கடிக்கு மத்தியில் எவர்கிராண்டில் செலவுக் குறைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் நிலைமையை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் எதும் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக யான் தனது சில வீடுகளையும் தனியார் விமானங்களையும் விற்று கடனை அடைத்தார். கடனில் சிக்கித் தவிக்கும் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு முதல் அதன் நிதிநிலை அறிக்கைகள் குறித்து சீனா செக்யூரிட்டிஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் (CSRC) விசாரணையை எதிர்கொள்கிறது.

கொரோனா காரணமாக சீனாவில் மிகவும் நெருக்கடியான நிலை உருவாகி வருகிறது. டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை, அதாவது 36 நாட்களில் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கையை சீனா வெளியிடுவது இதுவே முதல் முறை. மிக கடுமையான கோவிட் கொள்கையை தளர்த்திய பிறகு, சீனாவில் திடீர் என தொற்று பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்துள்ளன. 

மேலும்  படிக்க | Sleep Of Zhurong: சீனாவின் மார்ஸ் ரோவர் ‘மீளாத்துயிலில்’ ஆழ்ந்துவிட்டதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor