இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சூப்பர் பாட்மின்டன் தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய வீரர் பிரியான்சு முன்னேறினார். இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் மாஸ்டர்ஸ் ‘சூப்பர் 500’ பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, தகுதிப்போட்டியின் முதல் சுற்றில் பிரியான்சு ராஜாவத், பிரான்சின் கிறிஸ்டோவை சந்தித்தார். துடிப்பாக செயல்பட்ட பிரியான்சு 21–17, 21–19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் இவர் டென்மார்க்கின் விக்டரை எதிர் கொண்டார். அசத்திய பிரியான்சு 21–10, 13–21, 21–13 என வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.