அனைத்தையும் உறையவைக்கும் மைனஸ் 50 டிகிரி வெப்பநிலையிலும் அதற்கேற்றவாறு தயாரிப்புகளோடு வாழ பழகியிருக்கிறார்கள் மக்கள். பருவநிலை சுழற்சி என்பது உலக நாடுகளில் பல்வேறு காலநிலைகள் மாறி மாறி ஏற்படுவதற்கு காரணமாகும். சில நாடுகளில் அதிகப்படியான கோடை காலமும் சில நாடுகளில் அதிகப்படியான குளிர்காலமும் ஏற்படுவது வழக்கம். பூமத்திய ரேகையில் இருந்து நாடுகள் அமைந்திருக்கும் தூரம் தான் அந்த நாடுகளின் பருவநிலை சுழற்சியின் தன்மையை தீர்மானிக்கிறது. அதன்படி உலகில் மனிதர்கள் வாழும் மிகவும் குளிரான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது சைபீரியா நாட்டில் உள்ள யாகுட்ஸ்க் நகரம்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 5,000 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த நகரம். கோடை காலத்தில் அதிகபட்சமாக 34 டிகிரியாக வெப்பநிலைய இருக்கும். இந்த நகரத்தில் குளிர் காலம் மிக கொடுரமையானதாக இருக்கும்.அதாவது குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். இந்த கடும் குளிரில் அந்த நகரில் ஓடும் லெனா ஆறு உறைந்து கல்போல ஆகிவிடும். சாலையாக பயன்படுத்துவார்களாம் மக்கள்.
இந்த கடுமையான குளிரில் மக்கள் வாழ முடியுமா? வாழத்தான் செய்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்கிறார்கள் மக்கள். இப்போது அந்த நகரின் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் இரண்டு மூன்று கையுறைகள், கனமாக தொப்பி, தோலால் ஆன கனமாண மேலாடை என ஒவ்வொருவரும் சுமார் 20 கிலோ எடையுள்ள ஆடைகளை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் குளிரை நீங்கள் எதிர்த்து போராட முடியாது. ஒன்று அதற்கேற்றவாறு நீங்கள் தயாராக வேண்டும். அல்லது குளிரால் நடுங்க வேண்டும் எனக் கூறுகிறார் அந்த நகரவாசியான அனஸ்டாசியா குருஸ்டெவா. மனதளவில் நாம் தயராகும் போது, குளிர் நமக்கு உறைக்காது. அல்லது நாம் அதற்குப் பழகிவடுவோம் என்றும் எதார்த்தமாக கூறுகிறார் அனஸ்டாசியா. இந்த குளிர்காலத்தில் மீன்கள் கூட நீரில் நீந்த முடியாமல் உறைந்து போகுமாம்.
அப்படி உறைந்து போன ஆறுகளில் கிடைக்கும் இந்த உறைந்து போன மீன்கள் தான் குளிர்காலத்தில் அவர்களின் முக்கிய உணவாகும். நாம் வெப்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டாலே மனதுக்குள் ஒரு வெம்மை வந்து சேரும். அப்படியே வாழ்ந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் இந்த மக்கள். இந்த உறையும் குளிரிலும் அந்த நகரில் கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படுகின்றன. மக்கள் தெருக்களில் நடமாடுகிறார்கள். மனசுதான் எல்லத்துக்கும் காரணம் என்ற வாக்கியத்திற்கு நல்ல உதாரணம் யாகுட்ஸ்க் நகர மக்கள்.
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.