வாஷிங்டன்: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் குறித்து தெரியாது என்று அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் ஊடகமான பிபிசி ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் எடுத்துள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

2002 குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தோடு அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடி தொடர்புபடுத்தப்பட்டுள்ளார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. சமூக வலைதளங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த நிரூபர் பிபிசி ஆவணப்படம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நெட் பிரைஸ், “நீங்கள் கூறும் குஜராத் கலவரம் குறித்த பிபிசியின் ஆவணப்படம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால்  இரண்டு செழிப்பான, துடிப்பான ஜனநாயக நாடுகளான அமெரிக்கா-இந்தியாவை இணைக்கும்  மதிப்புக்களை நான் அறிந்திருக்கிறேன். இந்தியாவுடனான வாஷிங்டனின் உலகளாவிய  கூட்டாண்மையை வலுப்படுத்தும் பல்வேறு கூறுகள் உள்ளன. நெருங்கிய அரசியல் உறவுகள் உள்ளன. பொருளாதார உறவுகள் உள்ளன. மிகச்சிறப்பாக இருநாட்டு மக்களிடையே ஆழமான உறவு உள்ளது”என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *