இந்த நிலையில், சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது, சையது தன் காரை பார்க்கிங் செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த கார், சைக்கிள் ஓட்டிவந்த சிறுவன் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.

இதில் தடுப்பு சுவரின்மீது தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு நெஞ்சு, காது, மூக்குப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.