ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய இளம் வீரரானார் சுப்மன். இவர், 23 வயது, 132 நாளில் இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் 2022ல் இந்தியாவின் இஷான் கிஷான் 24 வயது, 145வது நாளில் இச்சாதனை படைத்திருந்தார். இவ்வரிசையில் இந்தியாவின் ரோகித் (26 வயது, 186 நாள்) மூன்றாவதாக உள்ளார். 

* ஒருநாள் அரங்கில் அதிக வயதில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் (36 ஆண்டு, 306 நாட்கள்) முதலிடத்தில் உள்ளார்.

 10

ஒருநாள் அரங்கில் இதுவரை 10 இரட்டை சதம் பதிவானது. இதில் இந்தியாவின் ரோகித் 3 முறை இச்சாதனை படைத்தார். இந்தியாவின் சச்சின், சேவக், இஷான் கிஷான், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், பாகிஸ்தானின் பகார் ஜமான், நியூசிலாந்தின் கப்டில் இதுபோல சாதித்தனர். 

 

19

ஒருநாள் அரங்கில் குறைந்த இன்னிங்சில் மூன்றாவது சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார் சுப்மன் (19). முதலிடத்தில் ஷிகர் தவான் (17 இன்னிங்ஸ்) உள்ளார்.

 

125

நேற்று 2 சிக்சர் விளாசிய ரோகித், சொந்தமண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் ஆனார். இவர் மொத்தம் 125 சிக்சர் விளாசியுள்ளார். தோனி (123), சச்சின் (71), கோஹ்லி (66), யுவராஜ் சிங் (65) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 

 

208

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அரங்கில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் ஆனார் சுப்மன். இவர் நேற்று 208 ரன் குவித்தார். இதற்கு முன் இந்தியாவின் சச்சின் 186 (ஐதராபாத், 1999), ஆஸ்திரேலியாவின் ஹைடன் 181 ரன் (ஹாமில்டன், 2007) எடுத்ததே அதிகமாக இருந்தது.

* ஐதராபாத் மைதானத்தில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் சுப்மன். முன்னதாக 2009ல் இங்கு இந்தியாவின் சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 175 ரன் எடுத்து இருந்தார். 

 

அதிவேக ‘1000’

ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர் ஆனார் சுப்மன் கில். இவர் 19 இன்னிங்சில் 1102 ரன் எடுத்துள்ளார். சர்வதேச அரங்கில் பகர் ஜமான் (18 இன்னிங்ஸ், பாக்.,) முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சுப்மன், இன்சமாம் (19, பாக்.,) உள்ளனர். விவியன் ரிச்சர்ட்ஸ் (வெ.இண்டீஸ்), பீட்டர்சன், டிராட் (இங்கிலாந்து) தலா 21 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினர். 

* இந்தியாவின் கோஹ்லி, தவான் 24 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்தனர்.

 

பாண்ட்யா ‘அவுட்’ குழப்பம்

மிட்செல் வீசிய 40 வது ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்டார் இந்தியாவின் பாண்ட்யா. பந்து ஸ்டம்சிற்கு மேலாக சென்றது. விக்கெட் கீப்பர், கேப்டன் லதாம் ஸ்டம்சிற்கு மேல் கையை வைத்து பந்தை பிடித்தார். அப்போது ‘கிளவ்ஸ்’ பட்டு ‘பைல்ஸ்’ விழுந்தது. போல்டானதாக அவுட் கேட்கப்பட்டது. ‘ரீப்ளே’யில் பார்த்த மூன்றாவது அம்பயர் அனந்தபத்மனாபன் அவுட் தர, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

 

162

நியூசிலாந்தின் பிரேஸ்வெல், சான்ட்னர் ஜோடி நேற்று 162 ரன் எடுத்தது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 7வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இது அமைந்தது. இதற்கு முன் வங்கதேசத்தின் மகமதுல்லா, மெஹிதி ஜோடி (2022) 148 ரன் எடுத்து இருந்தது.

* ஒருநாள் அரங்கில் 7வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ‘பார்ட்னர்ஷிப்’ ரன்னாக இது அமைந்தது. முதல் இரு இடத்தில் இங்கிலாந்தின் பட்லர், ரஷித் ஜோடி 177 ரன் எடுத்தது (2015, எதிர்–நியூசி.,), வங்கதேசத்தின் ஆபிப், மெஹிதி ஜோடி (174 ரன், 2022, எதிர்–ஆப்கன்) உள்ளன.

 

57

நியூசிலாந்தின் பிரேஸ்வெல் 57 பந்தில் சதம் விளாசினார். குறைந்த பந்துகளில் சதம் விளாசிய நியூசிலாந்து வீரர்களில் பிரேஸ்வெல் மூன்றாவது இடம் பிடித்தார். இந்த வரிசையில் கோரி ஆண்டர்சன் (36 பந்து, 2014, வெ.இண்டீஸ்), ஜெசி ரைடர் (46 பந்து, 2014, வெ.இண்டீஸ்) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor