அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் காணாமல் போன சிறுமி போலீஸாரால் சிறிது நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டார்.
அருப்புக்கோட்டை சொக்கலிங் கபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது 13 வயது மகள், நேற்று காலை பள்ளி செல்வதாகக் கூறிச் சென்றார். ஆனால் பள்ளிக்குச் செல்லவில்லை என்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து, அருப்புக்கோட்டை நகர் போலீஸில் சரவணன் புகார் அளித்தார்.