ஊட்டி :  ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பூத்துள்ள பிரமிளா வகை மலர் செடிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்படும். மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, பூங்காவில் தற்போது நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. நுழைவு வாயில் பகுதியில் மட்டும் பிரமிளா வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டள்ளது. இதில், ஊதா நிற மலர்கள் பூத்துக் காணப்படுகிறது. பூங்கா முழுவதிலும் மலர்கள் இல்லாத நிலையில், தற்போது நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிரமிளா வகை மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், இந்த மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor