காஞ்சிபுரம் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில், முன்னாள் முதல் அமைச்சரும் அதிமுக நிறுவனருமான,  எம்ஜிஆரின்  106- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

 

நலத்திட்ட உதவிகள் 

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் காவாந்தண்டலம் ஊராட்சியில்,  எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில்  அதிமுக கம்பத்தில் கொடி ஏற்றி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா வழங்கியும், பெண்களுக்கு சேலை வழங்கியும் விழா நடைபெற்றன. 

 

முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம்

 

இதனைத் தொடர்ந்து காவாந்தண்டலம் ஊராட்சியில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் பேசுகையில், முன்னாள் முதல்வர்  எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தான் சத்துணவு திட்டம், ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். கிராமத்தில் வாழும் குடிசை வீடுகளுக்கு ஒரு விளக்கு கொண்ட மின்சார இணைப்பை இலவசமாக  கொண்டு வந்தவர் எம்ஜிஆர் என்றும் நினைவு கூர்ந்தார்.

 

பொங்கலுக்கு பானையை மட்டுமே..

 

மேலும் திமுக ஆட்சியில் மக்கள் திட்டத்திற்கான எந்த திட்டங்களையும் ,கொண்டு வருவது இல்லை என்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆட்சியில் தான் கிராமப்புறங்களில் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட 2500 ரூபாய் மற்றும் பொங்கல் பொருட்களை இலவசமாக வழங்கியதாகவும் கூறினார். மேலும் அப்போது எதிர் கட்சியாக இருந்த திமுக அரசு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகைக்கு 5000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பினை வழங்குவோம் என கூறிவிட்டு, வெறும் 1000 ரூபாய் மட்டுமே வழங்கி அவற்றைக் கொண்டு பொதுமக்கள் பொங்கலுக்கு பானையை மட்டுமே வாங்க முடியுமே தவிர அந்த அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது இந்த ஆட்சியில் என பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.

 

மேலும் திராவிட மாடல் ஆட்சி என்பது தாத்தா, மகன், பேரன், கொள்ளு பேரன் என ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே முதல்வராக வரவேண்டும் என்பது திராவிடர் மாடல் ஆட்சி ஆகும் என கூறினார். இக்கூட்டத்தில் அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.‌கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம். ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜ், காவாந்தண்டலம் அதிமுக நிர்வாகிகள் கிருபாகரன், சபாபதி, பாரிவள்ளல் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

 

 

செங்கல்பட்டில் எம்.ஜிஆர் 106 வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு  பொதுக்கூட்டம் நடைபெற்றது

 

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி ஆஇஅதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு நகரக் செயலாளர் வி.ஆர். செந்தில்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சம்பத் குமார், குணசேகரன், கஜா என்கிற கஜேந்திரன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

 

இதில் சிறப்பு அழைப்பாளராக  மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் சா. ராஜேந்திரன், மற்றும் தலைமை கழகச் பேச்சாளர்கள் கவிஞர் முத்துலிங்கம், சபாபதி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர.  மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கனிதா சம்பத், பா.தன்சிங் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள், பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *