ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அது விசாரனைக்கு வந்தபோது, நீதிபதிகள்  தமிழக அரசிடம் சில கேள்விகளை முன் வைத்தனர்.  

தற்போது திராவிட மாடல் என்பது பரிச்சயமாக அழைக்கப்படும் சூழலில், மாடல் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் சொல் என்ன? ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே? –  தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் உண்மையிலேயே கடுமையாக பாடுபட வேண்டும். சட்டக் கல்லூரி உள்பட கல்லூரிகளின் பாட புத்தகங்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும். அதோடு, வழக்கு தொடர்பான குறிப்பு எடுக்கப் பயன்படும் சட்டப் புத்தகங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும். தமிழக அரசாணையை பின்பற்றாமல் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்கள், கடைகளில் 1982 ம் ஆண்டு அரசாணைப்படி, தூய தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலருக்கு மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் பல மாதங்கள் கடந்த நிலையிலும், இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

image

எனவே நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “அரசு அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய அலுவலகங்களின் பெயர் பலகை, தமிழக அரசின் அரசாணைப்படி உரிய முறையில் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களின் பெயர் பலகையை அரசாணை படி, தமிழ், ஆங்கில மொழிகளில் வைப்பதில்லை. தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறையே நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'” என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் , தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் உண்மையிலேயே கடுமையாக பாடுபட வேண்டும். சட்டக் கல்லூரி உள்பட கல்லூரிகளின் பாட புத்தகங்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும். அதோடு, வழக்கு தொடர்பான குறிப்பு எடுக்கப் பயன்படும் சட்டப் புத்தகங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும். 

தற்போது திராவிட மாடல் என்பது பரிச்சயமாக அழைக்கப்படும் சூழலில், மாடல் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் சொல் என்ன? ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே? என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசாணையின்படி தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பெயர் வைக்காமல், ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகை வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தொழிலாளர் நலத்துறை செயலர், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor