இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போன்று மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கு பிறகு இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கின்றன. இந்த தொடருக்கு முன்னதாக, ஒரு சில இந்திய வீரர்களை அடுத்த புதன்கிழமைக்குள் (ஜனவரி 25) ராஞ்சியை அடைந்து தகவல் கொடுக்குமாறு பிசிசிஐ கேட்டு கொண்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார். துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ராஞ்சி மைதானத்தில் வருகிற ஜனவரி 27ம் தேதியும், அடுத்தடுத்து லக்னோ மற்றும் அகமதாபாத்திலும் விளையாட இருக்கின்றன. இதற்காக ரஞ்சி கோப்பை அணியில் இருந்து பிரித்வி ஷா, தீபக் ஹூடா மற்றும் ராகுல் திரிபாதி உள்ளிட்ட வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டிக்காக இந்திய அணி புதன்கிழமை (ஜனவரி 25) ராஞ்சியை சென்றடைகிறது. மும்பை ரஞ்சி டிராபி அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திவ்யான்ஷ் சக்சேனா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுபுறம், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா போன்ற வீரர்களும் ரஞ்சி கோப்பையில் தொடரில் இருந்து விலகப்பட்டு இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

 பிருத்வி ஷா உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், நீண்ட  நாட்களுக்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அக்சர் படேல் மற்றும் கே.எல். ராகுல் தங்களது திருமணம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி ராஞ்சியில் ஜனவரி 27ம் தேதி நடக்கிறது. மேலும், தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *