மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 420 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் உள்ளனர். இவர்களுக்கு உதவ ஊராட்சி செயலாளர்கள் உள்ளனர். இப்பணியில் உள்ளவர்கள் கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த செயல்படுவர்.
வரிவசூல், குடிநீர், சுகாதாரம், துாய்மைப் பணி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அரசுக்கு தேவையான புள்ளி விவரங்களை வழங்குதல், ஊராட்சிகளுக்கான அரசு திட்டங்களை கொண்டு சேர்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இப்பணியிடங்களில் பெரும்பாலானவை காலியாக உள்ளன. உதாரணமாக சேடப்பட்டி ஒன்றியத்தின் மொத்தமுள்ள 31 ஊராட்சிகளில் வண்டப்புலி, வேப்பம்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, தாடையம்பட்டி, காளப்பன்பட்டி, முத்துநாகையாபுரம் ஊராட்சிகளில் பணியிடம் காலியாக உள்ளது.
மொத்தமுள்ள ஊராட்சிகளில் 46 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்மூலம் 92 ஊராட்சிகளில் அடிப்படை பணி பாதிக்கிறது. 10 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால், அந்த இடங்களை அருகில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் கவனிக்கின்றனர். இதனால் ஏற்கனவே ஊராட்சிகளில் பணிச்சுமையுடன் செயல்படும் அவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. இதனால் இரு ஊராட்சிகளின் பணிகளும் பாதிக்கின்றன. எனவே காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை, ஜன. 24-
மதுரை மாவட்டத்தின் 46 ஊராட்சிகளில் செயலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அடிப்படை பணிகள் பாதிப்படைந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
