21ம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கையில் உலகில் இருக்கும் பெரும்பாலான துறைகளிலும் பெண்கள் முன்னிலையில் பங்களித்து வருகிறார்கள்.
தம்பதியாக இருக்கும் வீட்டில் இருவருமே பணிக்கு சென்று சம்பாதித்தால்தான் வாழ்வாதாரத்துக்கு எந்த குறைவும் இருக்காது என்று எண்ணும் இதே காலகட்டத்தில் 1950’களில் இருந்ததை போன்று பெண்கள் பலரும் இல்லத்தரசியாக இருப்பதையே விரும்புகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

இப்படியான நிகழ்வு தற்போது மற்ற நாடுகளில் நடக்கும் போது உலகுக்கே ஒரு முன்னுதாரணமாக இருந்த மேற்கத்திய நாடுகளில்தான் தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதை விடுத்து வீட்டிலேயே குழந்தைகளை பராமரித்து வருவதை கடைப்பிடித்து வருகிறார்கள்.

The Rise of the

அதன்படி அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 29 வயதான அலெக்சியா டெலாரோஸ் என்ற பெண் ஆயிரக்கணக்கான டாலர்களில் வருமானம் ஈட்டக் கூடிய வேலையை ராஜினாமா செய்துவிட்டு 50’களில் இருந்ததை போல கணவர், 2 குழந்தைகள் மற்றும் வீட்டை கவனித்துக் கொண்டு வருகிறார்.

அலெக்சியா மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளில் இந்த பழக்கம் தற்போது பெரும்பாலான பெண்களிடையே தொற்றியிருக்கிறது. அதனை Tradwives என்றும் அழைக்கிறார்கள். அதாவது, பெண்கள் தங்களுக்கான பாரம்பரிய, கலாசாரங்கள் அடங்கிய செயல்களில் ஈடுபடுவதை குறிக்கிறது.

தொழிலுக்கு பதில் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பால் தங்களுக்கான உரிமைகள் எதுவும் பறிபோய்விடவில்லை என்றும் பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த tradwives முறை ஏதோ திடுதிப்பென முளைத்துவிடவில்லை. 2018ம் ஆண்டில் இருந்தே இந்த tradwife ட்ரெண்டிங்கிலேயே இருப்பதாக கூகுள் ட்ரெண்ட்ஸின் தரவுகள் மூலம் அறிய முடிகிறது.

இது குறித்து பேசியிருக்கும் அலெக்ஸியா, “குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் வேலையில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக இருந்ததாலேயே இல்லத்தரசியாக இருக்க முடிவெடுத்தேன். என் அம்மாவும் வேலைக்கு சென்றார். அதேவேளையில் குடும்பம், நண்பர்கள் என மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். என்னுடைய குடும்பத்திற்கு பாரம்பரியமான ஆளாக நான் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

முழு நேரமாக கணவன் வேலை பார்ப்பதும், மனைவி வீட்டில் குழந்தைகள் அரவணைத்து கவனிப்பது போன்ற இந்த 50’ஸ் ஸ்டைல் குடும்ப வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது ரொமான்ட்டிக்காகவும் இருக்கிறது.” எனக் கூறியிருக்கிறார். அலெக்ஸியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு 12 ஆயிரத்துக்கும் மேலான ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக தனது குடும்பத்துடன் செலவழிக்கும் நேரத்தை ஃபோட்டோ, வீடியோவாக பதிவிட்டு பகிர்ந்து வருகிறார்.

இல்லத்தரசியாக இருக்கும் அலெக்ஸியாவின் முடிவுக்கு பலரும் பலதரப்பட்ட கருத்துகளை முன்வைத்திருந்தாலும் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஆணித்தரமாகவே அலெக்ஸியா தெரிவித்திருக்கிறார்.

அதாவது தான் எந்த வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும், கூடாது என்பதை முடிவெடுக்கும் முழு உரிமையும் தனக்கு இருக்கிறது, குழந்தைகளை கவனித்துக் கொண்டே வேலைக்கு போவதும், வீட்டிலேயே இருந்து குழந்தைகள், குடும்பத்தை மட்டும் கவனித்துக்கொள்வதும் அவரவர்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவு என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அலெக்ஸியாவின் பதிவுகள் இருந்து வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor