ஐசிசியை ஏமாற்றி 20 கோடி கொள்ளை!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியை ஏமாற்றி சுமார் 20 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் மின்னஞ்சல் கணக்குகளைப் பயன்படுத்தி இந்த கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது. Phishing யுக்தி எனப்படும் இதில் ஐசிசியின் மின்னஞ்சல் முகவரி போன்ற போலி முகவரிக் கொண்டு பலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. இதை நம்பி பணம் அனுப்புவோரின் தொகை, அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். இது போல் ஒரு முறை அல்ல நான்கு முறை ஏமாந்துள்ளது ஐசிசி.

மறுப்புக்கிடமான சொற்களைப் பயன்படுத்தாதீர்கள்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான ப்ரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்கள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷரண் சிங், சமூக வலைத்தளங்களில் தவறான கோஷங்கள், புகைப்படங்கள், கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. எந்த ஒரு அரசியல் கட்சியையோ, சமூகத்தையோ, இனம், மதத்தையோ இழிவு படுத்தும் கருத்தை நான் மறுக்கிறேன். மேலும் நான் எந்த ஒரு கட்சியையும் விட உயர்ந்தவன் அல்ல. என்னை ஆதரிப்போர் இத்தகைய பதிவுகளிடம் இருந்து விலகியிருங்கள் என பதிவிட்டுள்ளார்.

உம்ரானுக்கு ஷமியின் அட்வைஸ்!

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முகம்மது ஷமி, ஜம்மு காஷ்மீரின் இளம் வீரர் உம்ரான் மாலிகிடம், “நீ வீசும் பந்தின் வேகத்திற்கு எதிராக விளையாடுவது அத்தகைய சுலபம் அல்ல. சரியான லைன் மற்றும் லெந்தில் வீசுவதில் கவனம் செலுத்த வேண்டும். அது நன்றாக வந்துவிட்டால், நீ இந்த கிரிக்கெட் உலகையே ஆளலாம்” என அறிவுரை வழங்கியுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor