பிரபல நடிகர் ஷாருக்கான், அசாம் முதல்வரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினாராம்
India
oi-Hemavandhana
புவனேஸ்வர்: அசாம் மாநில முதல்வருக்கு, விடிகாலை 2 மணிக்கு, ஷாரூக்கான் போனில் பேசினாராம்.. இதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
பிரபல நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பதான்… மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணி வரும் இந்த படம், வருகிற 25-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது..
இதையொட்டி, படத்தின் டிரைலர், பாடல்கள் கடந்த டிசம்பரில் வெளியானது.. அதில், பேஷாராம் ரங் என்ற பாட்டு, கடுமையான சர்ச்சையை கிளப்பியது.
பதான் சர்ச்சை: ஷாருக்கானா அது யாரு? செய்தியாளர்களிடம் பதில் கேள்வி எழுப்பிய அசாம் முதல்வர்!

படுகவர்ச்சி
அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் காணப்படுகிறார் என்று சர்ச்சை வெடித்தது… இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன… மேலும், இந்த பாடலுக்கு தடை கோரி, கோர்ட்டில் கேஸும் தொடுக்கப்பட்டது.. பிரதமமர் மோடி சமீபத்திய உரையில், “நம்மில் சிலர் சினிமாக்களை பற்றி தேவையற்ற கருத்துகளை வெளியிடுகிறார்கள். தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் கூறியிருந்தது கவனத்தை பெற்றது.

ஐநாக்ஸ்
பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரில் இந்து ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பதான் படம் ரிலீஸ் ஆக கூடாது என்று தியேட்டர் நிர்வாகத்தினரிடம் சொல்லிவிட்டு சென்றார்கள். அதேபோல அசாம் மாநிலத்திலும் இந்த பிரச்சனை தலைதூக்கி உள்ளது.. அசாம் தலைநகர் கவுகாத்தியிலும் பதான் படம் வெளியாகவிருந்த தியேட்டரில், அதன் பேனர்களை கிழிக்கப்பட்டுள்ளன.. சில அமைப்புகள் ரகளைகள், கலவரங்களை செய்துள்ளன.

நடிகர் ஷாருக்கான்
இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது… இதுகுறித்து, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு முதல்வர், “ஷாருக் கான் யார்? அவரை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது… அவரது பதான் படம் பற்றியும் எனக்கு ஒன்னும் தெரியாது.. மாநில மக்கள் அசாமை பற்றி கவலைப்பட வேண்டும்… இந்தி திரைப்படங்களை பற்றி கிடையாது.. ஷாருக்கான் என்னை தொடர்பு கொண்டு இதுவரை பேசவில்லை… ஒருவேளை அவர் என்னை தொடர்பு கொண்டால், அதுபற்றி கண்டிப்பாக விசாரிப்பேன்… அதில், சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்பட்டு இருந்தால், நிச்சயம் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

பறந்த போன்
ஷாருக்கான் யாரென்றே தெரியாது என்று அசாம் முதல்வர் கூறியிருந்தது, ஷாருக்கான் ரசிகர்களிடம் அதிர்ச்சியை உண்டுபண்ணியது.. அத்துடன், பல்வேறு மாநிலங்களில் இந்த படம் தொடர்பாக போராட்டங்களும், சர்ச்சைகளும் பெருகி வரும்நிலையில், அதை பற்றி முதல்வர் தெரியாது என்று சொன்னதும், பரபரப்பை கிளப்பியது.. இந்நிலையில், நேற்று அதிகாலை அசாம் முதல்வருக்கு, ஷாருக்கானே போன் செய்துள்ளார்.. அப்போது நேரம், விடிகாலை 2 மணி என்கிறார்கள்.. அந்த போனை எடுத்து முதல்வர் பேசியுள்ளார்.. பின்னர் இதுதொடர்பாக, முதலமைச்சர் பிஸ்வா ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்..

மிட்நைட் 2
அதில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் என்னை இன்று அதிகாலை 2 மணியளவில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது படம் திரையிடப்பட்டபோது, கவுகாத்தி நகரில் நடந்த சம்பவம் பற்றி வருத்தம் தெரிவித்து பேசினார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை என்று அவருக்கு உறுதி சொன்னேன்.. இதுபற்றி நாங்கள் விசாரணை செய்து, அதுபோன்ற சம்பவங்கள் மறுபடியும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்.
English summary
Famous Actor shah rukh khan who minister asked the phone rang at 2 am, why
Story first published: Monday, January 23, 2023, 14:28 [IST]