இந்த பிரபஞ்சம் எண்ணற்ற ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் புரியாத புதிரானது. ஆனால் அத்தனை புதிர்களையும் கண்டுப்பிடித்திடவேண்டும் என்று விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள். ஆனாலும் சிலவற்றை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகளே திணருகிறார்கள். அதில் ஒன்று தான் பெர்முடா முக்கோணம். கரீபியக் கடலில் அமைந்துள்ள தீவு கூட்டமான போர்ட்டோ ரிக்கா மற்றும் அமெரிக்காவை ஒட்டி அமைந்துள்ள ஃப்ளோரிடா, நீரிணை ஆகிய மூன்றையும் இணைக்கும் முக்கோண வடிவிலான கடல் பரப்பு ‘பெர்முடா ட்ரையாங்கிள்’ என்கிறார்கள். இதன் பரப்பளவு சுமார் 7,00,000 மைல்கள் என வரையறுக்கப்படுகிறது. இதை சாத்தானின் முக்கோணம் (Devil’s Triangle ) என்றும் அழைக்கிறார்கள்.

image

அதென்ன சாத்தானின் முக்கோணம்? விந்தையாக உள்ளதா?….

ஆம், இப்பகுதியை கடக்கும் ஏராளமான கப்பல்களும், விமானங்களும் மாயமாய் மறைந்திருக்கிறது. அதனால் இப்பகுதி சாத்தானின் முக்கோணம் என்று கூறுகிறார்கள்.

இதைப்பற்றி, பரவலாக எல்லோரும் சொல்வது :

1939 முதல் 1945 வரையிலான இரண்டாம் உலகப்போர் நடந்த கால கட்டத்தில், 1945 டிசம்பர் 5 அமெரிக்கப்படைக்கு சொந்தமான 5 போர்படை flight 90 விமானங்கள் பெர்முடா பகுதியைக் கடக்கையில் விமானத்தில் திசைக்காட்டும் கருவிகள் திடீரென செயலிழந்தது. பின்னர், அவ்விமானங்கள் எங்கு சென்றன, அவற்றிலிருந்த 16 பேரின் நிலைமை என்னவாயிற்று என்று தெரியவில்லை. மறுபடி, இவர்களை தேடிக்கொண்டு பனானா ரிவர் எனும் கடற்படை விமானத் தளத்திலிருந்து 13 பேரைக் கொண்ட மெரைனர் ரக சிறு விமானம் ஒன்று அனுப்பப்பட்டது. இந்த விமானமும் திரும்பவில்லை. ஆனல், அந்த விமானமும் அதில் பயணித்தவர்களும் காணாமல் போயினர். இந்நிகழ்சிக்கு பிறகு பெர்முடா முக்கோணம் உலகத்திற்கு தெரியவந்து, பேசபட வைத்தது.

image

இப்பகுதியில் கல்ஃப்ஸ்டீபன் (gulf stream) என்னும் நீரோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இது சாதாரண நதியை காட்டிலும் மிக அதிவேகமாக பாயக்கூடியது. அதனால் இங்கு விபத்துக்குள்ளான மாயமான கப்பல்கள் விமானங்களின் உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வேறு சிலர் கரீபிய கடற்பகுதியில் கடற்கொள்ளையர்கள் அதிகம் இருந்ததால், இப்பக்கம் செல்லும் சரக்கு கப்பல்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என முதலில் கூறி வந்தார்கள். ஆனல் இவர்கள் கருத்தும் பொய் ஆனது. 1502 ம் ஆண்டு ஸ்பெயினுக்கு சொந்தமான கடற்படை கப்பல்கள் சூராவளி ஒன்று ஏற்பட்டதால், வழி தவறி பெர்முடா முக்கோணப்பகுதியை அடைந்து அங்கு பேரழிவை சந்தித்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.

image

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகானத்திலுள்ள, ஜாஸ்டன் துரைமுகத்திலிருந்து, நியூயார்க் துரைமுகத்தை நோக்கி 1812 டிசம்பர்30 ம் தேதி பேட்ரியாட் என்ற கப்பல் புறப்பட்டது அது பெர்முடா பகுதியை கடக்கும் பொழுது மாயமானதாக தகவல் தெரிவிக்கின்றது. அந்தக் கப்பலில் இருந்து காணாமல் போனவர்களில் ஒருவர் தியோடீசியா பர் ஆல்ஸ்டன். இவர் அமெரிக்காவின் மூன்றாவது துணை அதிபராக பொறுப்பு வகித்த ஆரோன் பர்ரின் மகள். ஆனால் அக்கப்பலின் நிலை என்ன? என்பது பற்றியும் அதில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன? என்பது பற்றியும் எவ்வித விவரமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

மேற்கண்ட சம்பவம் நடந்து முடிந்து சுமார் ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் பின்னர் இதேபோல இன்னொரு நிகழ்வு நடக்கிறது. 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் பார்படாஸ் தீவிலிருந்து கிளம்பிய யூஎஸ்எஸ் சைக்லோப்ஸ் எனும் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் அதில் பயணம் செய்த சுமார் 300 பேர் என்ன ஆனார்கள் என்ற தகவல் தெரியவில்லை.

image

கொலம்பஸ் பயணத்தில் நிகழ்ந்தது என்ன?

1492 அக்டோபர் 8ம் தேதி பெர்முடா முக்கோணப்பகுதியில் திசை காட்டிகள் செயலிழப்பதாக கொலம்பஸ் தெரிவித்தார். பெர்முடாஸ் அருகில் சென்றபொழுது வித்தியாசமான ஒளி விண்ணில் பாய்ந்ததாகவும், அந்த ஒளி கீற்று பலமுறை தோன்றி மறைந்ததாகவும் அவர் கூறினார். 1872 டிசம்பர் 4ம் தேதி நியூயார்கிலிருந்து இத்தாலியின் ஜெனிவாவிற்கு மேரிஸ்ஜெலஸ் என்ற கப்பல் காணாமல் போனது. அதில் கேப்டனின் குடும்பம் அவர்களுடன் பணியாளார்கள் என்று பயணித்த அனைவரும் காணாமல் போயினர். ஆட்கள் யாரும் இன்றி அக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.

கப்பலில் உள்ளவர்களை ஏலியன்ஸ் கடத்தி செல்லப்பட்டார்கள் என்று கூறப்பட்டாலும் பயணிகள், மற்றும் உயிர்காக்கும் கவசத்தை தவிற வேறெதுவும் காணாமல் போகாததால், இது கடற்கொள்ளையர்களின் வேலை இல்லை என்பதும் தெரியவந்தது.

1881ம் ஆண்டு எலனாஸின் என்ற கப்பலும் காணாமல் போய் உள்ளது. 1949 ஆண்டு 39 பேருடன் பயணம் செய்த பயணிகள் விமானம் ஒன்றும் காணாமல் போய் உள்ளது. இது போல பெர்முடா முக்கோணப்பகுதியில் காணாமல் போன, கப்பல்களும், விமானங்களும் ஏராளாம் என செய்திகள் கூறுகின்றன. இவை காணமல் போவதற்கு பல காரணங்கள் கூறினர். ஆனாலும் சரியான காரணத்தை கூற முடியவில்லை. வேற்று கிரகவாசியால் தான் இத்தகைய நிகழ்வு நடக்கிறதென்றும், கொலம்பஸ் பார்த்தது கூட வேற்று கிரகவாசிதான் என்றும், இதெல்லாம் ஏதும் இல்லை, அமானுஷ்ய சக்தி தான் காரணம் என்றும் சொல்கிறார்கள். அதனால் தான் அப்பகுதியை கடந்து செல்லும் கப்பல்களும் விமானங்களும் காணாமல் போவதாக கூறுகின்றனர்.

கப்பல், விமானம் மாயமாவதற்கு என்ன காரணம்?

சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்பு பெர்முடா முக்கோணப்பகுதியில் வால் நட்சத்திரம் ஒன்று விழுந்ததாகவும், அதன் பின் விளைவுகளாகவே கப்பல்களும் விமானங்களும் காணாமல் போவதாக கூறுகின்றனர். மீத்தேன் மற்றும் ஹைட்ரேட் அமிலங்கள் உறுவாகிக்கொண்டே இருப்பதாகவும் அது இக்கப்பல்களையும், விமானங்களையும் உருக்கிழைப்பதாகவும் கூறுகின்றனர். சில அறிஞர்கள், அப்பகுதியில் சுழலும் பருவநிலை மாற்றம் தான் இதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர். வேறு சிலர், செயற்கைகோள் படத்தின் மூலம் ஆராய்சி செய்ததில், அப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான் காற்று சுழற்சிதான் காரணம் என்றும் கூறுகின்றனர்.

1952இல் ஃபேட் எனும் பத்திரிகையில் ஜார்ஜ் சாண்ட் என்பவர் ‘A Mystery at our back door’ என்று ஒரு சிறு கட்டுரையை எழுதி இருந்தார் அதில் ஃப்ளைட் என்று பெயரிடப்பட்ட ஐந்து விமானங்கள் காணாமல் போனதன் பின்னணியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

image

அமானுஷ்ய சக்தி பற்றி கூறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்!?

Larry kusche என்பவர் The Bermuda triangle mystery solved என்ற புத்தகத்தை எழுதினார். மேலும் அவர் இது குறித்து சந்தேகம் ஒன்றையும் வெளியிட்டார். இது வரை காணாமல் போன கப்பல், விமானங்கள் எழுதும் பத்திரிக்கைகள், ஏன்? விபத்தில் சிக்காமல் திரும்பி வந்த கப்பல்களை பற்றி எழுதவில்லை என்ற கேள்வி ஒன்றையும் முன் வைத்தார்,

இவரது ஆய்வின் படி பெர்முடாஸ் முக்கோண பகுதிகளில் அடிக்கடி சூராவளி தோன்றும் பகுதி. வேறு மாதிரியான கட்டு கதைகள் பரப்பப்படுகிறது என்றார். அந்தப் பகுதிக்கு சென்று தப்பி வந்த ப்ரூஸ் என்ற விமானி ஒருவர், அப்பகுதியில் விமானத்தை இயக்கும் பொழுது திடீரென கருமேகங்கள் சூழ்ந்ததாகவும், திசை காட்டும் கருவிகள் இயங்கவில்லை எனவும், சூழ்நிலையை புரிந்துக்கொண்டு 20 நொடிகளில் அவ்விடத்தை கடந்து விட்டதாகவும், கூறினார்.

1964ல் எழுத்தாளர் வின்சட் காடிஸ், என்பவர் “The Deadly Bermuda Triangle” என்ற கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார். இதி அவர் தொடர்ச்சியான பல சம்பவங்களைப் பற்றியும் அந்தப் பகுதியில் நடப்பதை விவரித்திருந்தார். கப்பல்கள் விமானங்கள் மாயமானதின் உண்மையான காரணங்களை கண்டறிவதற்கு பதிலாக, அமானுஷ்ய சக்தி பற்றி கூறுவதிலேயே குறியாக இருந்ததாக அவரும் குற்றம் சாட்டுகிறார். ‘இன்விசிபிள் ஹாரிஸான்ஸ்’ (Invisible Horizons) எனும் நூல் ஒன்றையும் எழுதினார். இது 1960 மற்றும் 1970களில் மிகவும் பிரபலம் ஆகின. அவை அனைத்துமே சதித்திட்டத்தின் செயல்பாடு என்ற அடிப்படையில் எழுதப்பட்டவை.

image

ஆஸ்திரேலியா அறிவியல் ஆய்வாளார், காரூக்கிரிஸ்டெலிக் ( முனைவர் பட்டக் பெற்றவர்) தனது ஆய்வை விளக்குகிறார். மனித தவறுகளும் பூகோள அமைப்பு, மோசமான பருவநிலை ஆகியன மட்டுமே இதற்கு காரணம் என்றும், பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இது அமைந்திருப்பதாலும், தான் காரணம் என்றும் கூறுகிறார்.

image

இவர் ஒவ்வொரு விபத்திற்கும் ஒரு காரணம் கூறுகிறார். flight 90 ஐ தேடி சென்ற சிறிய விமானம், விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதாகவும்,
39 பேருடன் பயணம் சென்ற கப்பல் மோசமான வானிலை காரணமாக மூழ்கியது என்றும் அடுக்கடுக்கான காரணங்களை கூறினாலும், வருடா வருடம் அப்பகுதியில் விபத்து ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor