நாள்பட்ட பெருந் தொற்றுகளில் ஒன்று காசநோய். பாக்டீரியாவால் பரவக்கூடிய இந்த தொற்றுக்கு தொடர் இருமல், சளி, காய்ச்சல், உடல் எடை குறைவது உள்ளிட்டவை பிரதான அறிகுறிகளாக அறியப்படுகின்றன. நாள்பட்ட நோயாளிகளிடம் இருந்து அதிக அளவில் பரவக் கூடியது என்ற நிலையில், 1962 ஆம் ஆண்டு முதல் நாட்டில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1990-களின் இறுதியில் காசநோயை கட்டுப்படுத்துவதை ஒரு இயக்கமாக மாநில அரசு மேற்கொண்டிருந்தது.
அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகளை அதிகரித்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து அதன் மூலம் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. காசநோயை கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக இருந்தது அதன் அறிகுறிகள்தான். சளி, இருமல் போன்றவை இயல்பாக அனைவருக்கும் வரும் அறிகுறிகள் என்பதால் அதனால் பாதிக்கப்படுபவா்கள் பாிசோதனைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. உடல் எடை முழுமையாக குறையும் வரை பலா் பாிசோதனைக்கு செல்லாமல் இருப்பதால் பரவும் விகிதமும் அதிகரித்தது. இந்நிலையில், காசநோயால் பாதிக்கப்பட்டவா்களின் மாதிாிகளை எலிகள் எளிதில் கண்டறிவதாக ஆப்ரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
தான்சானியாவில் உள்ள பெல்ஜியத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம், எலிகளை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை எலிகள் 95 சதவீதம் துல்லியமாக கண்டறிவது தெரியவந்துள்ளது. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களுக்கு காச நோய் இருப்பதை கண்டறிவது சற்று கடினமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், எலிகள் அதனையும் துல்லியமாக கண்டுபிடிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எலிகளுக்கு இருக்கும் அதீத மோப்ப சக்தி மூலம் காசநோய் உள்ள மாதிரிகளை எளிதில் கண்டறிவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த முயற்சி வெற்றியடைந்தால், மருத்துவத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு எலிகள் மூலம் காசநோய்யை கண்டறியும் முறை பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.