Loading

நாக் அவுட் சுற்றில் நியூசிலாந்து அணியுடன் இந்திய ஹாக்கி அணி தோல்வியுற்றதால் தொடரிலிருந்தும் வெளியேறியது.

ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் 15வது ஹாக்கி உலகக் கோப்பை தொடர் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த நான்கு பிரிவுகளை சேர்ந்த, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன. டி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில், ஸ்பெயினை வீழ்த்தியது.

2வது போட்டியில் இங்கிலாந்துடன் சமன் கண்டது. 3வது போட்டியில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. சொந்த மண்ணில் நடைபெறுவதால், எப்படியும் இந்த முறை உலகக்கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்திய அணி லீக் ஆட்டங்களில் வாகை சூடி வந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இந்திய வீரர்களுக்கு பலத்த உற்சாகத்தைத் தந்தது.

image

இந்த நிலையில், டி பிரிவில் இங்கிலாந்து நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றதால் இரண்டாம் இடம் பிடித்த இந்தியா, நாக்-அவுட் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதன்படி, நாக் அவுட் போட்டியில் இந்திய அணி, இன்று இரவு 7 மணிக்கு புவேன்ஸ்வரில் நியூசிலாந்தைச் சந்தித்தது.

ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையாகப் போராடின. அதிலும் இந்திய அணிக்கு இன்றைய போட்டி வாழ்வா, சாவா என்ற நிலையில் இருந்தது. அதைநோக்கியே இந்திய அணி வீரர்கள் விளையாண்டனர். அதுபோல் நியூசிலாந்து அணியும் விட்டுக்கொடுக்காமல் வேட்டையைத் தொடர்ந்தனர்.

image

இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் கோல் அடித்து சமனிலை வகித்தன. இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பரபரப்பாக நடந்த ஷூட் அவுட் முறையில் நியூசிலாந்து 5-4 என்ற கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. இந்தியா நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டதன் மூலம் தொடரில் இருந்தும் வெளியேறியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *