மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கபட்டு வந்தது.
தற்போது அது 5 கிலோ குறைத்து 15 கிலோவாக வழங்கப்படுகிறது.
வசதி படை த்தவர்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை ரேஷன் கடை களில் வழங்கப்படும் பொருட்களை பயனாளிகள் பெறுகின்றனர்.இந்த அரிசியை நம்பி வாழும் மக்களும் அதிகளவில் இருக்கின்றனர்.
அவர்கள் 5 கிலோ குறை க்கப்பட்டதை எண்ணி வேதனையடைகின்றனர்.அது மட்டுமின்றி இன்னும் குறைத்து விடுவார்களோ என அச்சப்படும் நிலையும் உருவாகியுள்ளது. இதோடு மட்டுமில்லாமல் ரேஷன் அரிசிகளை கடத்துவதற்காகவே தனி கும்பல்கள் செயல்படுகிறது.அவர்களை தடுக்கும் நடவடிக்கை யிலும் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
இருந்த போதிலும் கடத்தல்கள் நடந்த வண்ணமாக தான் இருக்கிறது. ஏற்கனவே வழங்கிய அரிசியை வழங்க மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கின்ற போதிலும் அதிகாரிகள் அதை காதில் வாங்காமல் இருக்கின்றனர். நுகர் பொருள் வாணிப கழகம் மக்களிடம் எவ்வித அறிவிப்புமின்றி அரிசியை குறைத்ததால் மக்கள் அதிர்ச்சியடை ந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் கோரிக்கை களை ஏற்று ரேஷன் கடை களில் 20 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
