சென்னை: வாரிய தலைவர் பதவி பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.77 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாரதி என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் புகார் மனு ஒன்றுஅளித்திருந்தார். அதில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி வேலூரைச் சேர்ந்த புவனேஷ்,அவரது மனைவி ராஜலட்சுமி, சதீஷ் உட்படப் பலர் தன்னிடம் ரூ.77 லட்சம் பெற்று மோசடிசெய்துவிட்டதாகக் கூறியிருந்தார்.
புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதைத் தொடர்ந்து ராஜலட்சுமி, சதீஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடக்கிறது.