சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் பழ வியாபாரியிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மைதீன். இவர் தனது நண்பர் நசீம் என்பவர் தந்த ரூ.5 லட்சம் ரொக்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய சென்ற போது அங்கு வந்த 3 பேர் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றனர்.
இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மைதீன் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.