கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே ஏரியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி அருகே ஓ.என்.கொத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சாக்கு மூட்டை ஒன்று நேற்று மிதந்தது. மேலும், அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக கிராம மக்கள் குடிப்பள்ளி காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், ஏரியில் இருந்த சாக்கு மூட்டையை மீட்டு, பிரித்து பார்த்தனர்.