கரூர்: கரூர் அருகே புகழூரில் தனியார் சர்க்கரை ஆலையில் வாயு கசிவால் தொழிலாளர் 2 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கரும்பு சாறு தொட்டியிலிருந்து வெளியான வாயு கசிவால் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறைக்கு பிறகு இன்று இயந்திரம் இயக்கப்பட்ட நிலையில் வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது.