புதுச்சேரியில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “மாநில அந்தஸ்து கோரி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை மனு தந்திருப்பது சரியானதுதான். ஆனால், மாநில அந்தஸ்து பெற நீதிபகளிடம் ஆலோசனை தெரிவிக்குமாறு முதலமைச்சர் கூறியிருப்பது புரியாத புதிர். நீதிபதிகள் ஆலோசனை சொல்பவர்கள் அல்ல. சட்ட வல்லுநர்களைத்தான் அவர் ஆலோசிக்க வேண்டும். எங்கு, எந்தக் கோரிக்கை வைப்பது என்பது தெரியாமல் முதலமைச்சர் தள்ளாடுகிறார். அதேநேரத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவையில்லை என பாஜக மாநிலத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

புதுவை

தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் மனு தரும்போது, பாஜக தரப்பு தேவையில்லை என்பது முரண்பாடானதாக இருக்கிறது. மாநில அந்தஸ்து கிடைத்தால், மத்திய அரசு நிதி குறையும் என்பது தவறான கருத்து. அத்துடன் மத்திய அரசு தற்போது ரூ.1,721 கோடிதான் தருகிறது. 2022-23 நிதியாண்டில் புதுவைக்கு மத்திய அரசு ரூ.10,000 கோடி தந்ததாக பாஜக-வால் நிரூபிக்க முடியுமா… பொய்ப் பிரசாரம் செய்வதற்கு பத்மஸ்ரீ விருதை பாஜக-வுக்குத் தரலாம். உண்மையில் ஆட்சியிலுள்ள ரங்கசாமியும், என்.ஆர்.காங்கிரஸும், பாஜக-வும் மாநில அந்தஸ்து விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகின்றனர்.

ஐ.டி., சி.பி.ஐ போன்ற மத்திய அரசின் அமைப்புகளைத் தங்களின் கைப்பாவையாக வைத்திருப்பதுபோல் நீதிமன்றங்களையும் கைப்பாவையாக்க மத்திய அரசு முயல்கிறது. இதன் வெளிபாடுதான் நீதிபதிகள் நியமனத்தில், மத்திய அரசின் பிரதிநிதிகளைப் பங்கேற்கவைக்க முயல்வது. மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செயல்பாடு, `கொலீஜியத்தின் மூலம் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. நீதிமன்றங்களை விமர்சிக்கும் பணியை, பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் மூலம் செயல்படுத்துகிறார். தற்போது உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களில் 90% வழக்குகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரானவை.

பிரதமர் மோடியுடன் முதல்வர் ரங்கசாமி

தற்போது நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுப் பிரதிநிதிகள் இடம்பெறுவது எப்படிச் சரியாகும்… இது ஜனநாயகத்துக்கு எதிரானது. புதுவை அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தற்போது பொதுப்பணித்துறையில் ஒப்பந்தம் எடுப்போர் 13% கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற சூழலே நிலவுகிறது. ஏற்கெனவே கலால், உள்ளாட்சித்துறை, காவல்துறை ஆகியவற்றின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் வாய் திறக்கவில்லை” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor