India

oi-Arsath Kan

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: அரசு முறை பயணமாக ஒடிசா சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு செயல்படுத்தப்படும் ஜகா மிஷன் திட்டத்தை கள ஆய்வு செய்து அது குறித்த விவரங்களை ஒடிசா அதிகாரிகளிடம் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

கள ஆய்வின் போது குழாயிலிருந்து பிடிக்கப்பட்ட தண்ணீரை சற்றும் யோசிக்காமல் அருந்தி அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தார்.

இது தொடர்பான விவரம் வருமாறு;

தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சி! உதயநிதி போட்ட முக்கிய ஒப்பந்தம்! தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சி! உதயநிதி போட்ட முக்கிய ஒப்பந்தம்!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் 16-நாடுகள் பங்கேற்கின்ற 15-வது ஆண்கள் ஹாக்கி போட்டிகள் 2023-ஜனவரி 13 முதல் 29-வரை நடைபெறுகிறது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகின்ற இந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளை காணவும், அம்மாநிலத்தில் உள்ள விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிடவும், மூன்று நாள் சுற்றுப்பயணமாக புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா சென்றார்.

மிஷன் சக்தி திட்டம்

மிஷன் சக்தி திட்டம்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் ஹாக்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தும், விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளையும் பார்வையிட்டார். மேலும் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்பட்டு வருகின்ற ” மிஷன் சக்தி திட்டம்”- குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழில் தனிச் செய்தியாக கூட வெளியிட்டிருந்தோம்.

ஜகா மிஷன் திட்டம்

ஜகா மிஷன் திட்டம்

இந்நிலையில் புவனேஸ்வர் நகரின் அருகில் உள்ள இஷநேஸ்வர் பிஜு ஆதர்ஷ் காலனி கிராமத்தில் குடிசை மாற்றுப் பகுதியில் “குழாய் மூலம் குடிநீர்”
(JAGA MISSION SCHEME- The impact of ” DRINK FROM TAP”) திட்டத்தில் அப்பகுதி இளம், சுய உதவிக் குழுவினர் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பணிகளை பார்வையிட்டு பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடிய போது “சமுதாய வளர்ச்சி என்பது மகளிர் கையில் மட்டுமே உள்ளது” எனத் தெரிவித்தார்.

3 நாட்கள்

3 நாட்கள்

ஒடிசாவில் உதயநிதி ஸ்டாலின் தங்கியிருந்த 3 நாட்களும் மிகுந்த பரபரப்புடனும் ஆர்வமுடனும் அம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு புதுமையான திட்டங்களையும் அறிந்துக் கொள்வதில் தீவிரம் காட்டினார் உதயநிதி.

English summary

Minister Udhayanidhi Stalin, who went to Odisha on a government visit, made a field inspection of the Jaga Mission program being implemented there and inquired about it from the Odisha officials with interest.

Story first published: Saturday, January 21, 2023, 18:32 [IST]

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *