சக ஊழியர்களின் வேலை இழப்பை கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கும் கூகுள் ஊழியர்கள், தாங்களும் எப்போது வேண்டுமானாலும் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்கிற கவலையில் உள்ளனர்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் தனது பணியாளர்களில் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், உலகம் முழுவதுமுள்ள மொத்த பணியாளர்களில் 6 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளது. பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சார்பில் சம்பந்தப்பட்ட 12,000 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

சக ஊழியர்களின் வேலை இழப்பை கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கும் கூகுள் ஊழியர்கள், தாங்களும் எப்போது வேண்டுமானாலும் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்கிற கவலையில் உள்ளனர். வேலை இழந்த தொழிலாளர்கள் டிஸ்கார்ட், ஸ்லாக் போன்ற ஆடியோவுக்கான சமூக வலைதளங்களில் ஒன்றுகூடி தொடர்பில் உள்ளனர். வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த லாகின் வசதி துண்டிக்கப்பட்டது. இந்த பணிநீக்கங்கள் என்பது செயல்திறன் அடிப்படையில் இல்லாமல், கட்டமைப்பு ரீதியாக எடுக்கப்பட்டுள்ளது.
image

இந்த மாதத்தின் பிற்பகுதியில் பெர்பார்மன்ஸ் ரிவ்யூ-இன் அடிப்படையில் மேலும் பலர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்கிற கவலை கூகுள் ஊழியர்களிடம் எழுந்துள்ளது. கூகுள் ஊழியர்கள், ஒப்பந்த விதிமுறைப்படி மீடியாவுக்கு பேட்டி கொடுக்கவோ, நிறுவனத்தின் உள் விவகாரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடவோ அனுமதி கிடையாது என்பதால் ஊழியர்கள் தங்களது குமுறல்களை மெசேஜிங் செயலியில் கொட்டித்தீர்த்து வருகின்றனர்.

“கடந்த காலாண்டில் மட்டும் 17 பில்லியன் டாலர் லாபம் ஈட்டிய ஒரு நிறுவனம் இப்படியொரு மோசமான முடிவு எடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஆல்பாபெட் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகத் தலைவர் பருல் கவுல் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

“கூகுளில் எனது கடைசி நாளை 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எதிர்பாராத விதமாக மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொண்டேன் என்பதை நம்புவது எனக்கு கடினமாக உள்ளது. கன்னத்தில் அறைந்து வெளியே அனுப்பியதைப் போன்று உணர்கிறேன். எல்லோரும் நேருக்கு நேர் ஒருமுறை சந்தித்து விடைபெற்றுச் சென்றிருக்கலாமே எனத் தோன்றுகிறது” என்று மென்பொருள் பொறியாளர் பணியை இழந்த ஜெர்மி ஜோஸ்லின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor